மதவெறியும் ஆன்மிகமும்

அன்புள்ள ஆசிரியருக்கு

வணக்கங்கள். உங்கள் நலம் விழைகிறேன். இந்து மெய்மை நூலில் வரும் ‘பெண்களின் துறவு, ஒரு வினா’ பகுதியை படித்துக் கொண்டிருந்த போது இந்த மாபெரும் நிலப்பரப்பில் உலகியலைக் கடக்கத் துறவிகளாக அலைந்து திரிந்தவர்களின் காட்சி உள்ளாறாக பெருக்கெடுத்தது மனவெளியில் நிறைந்தது. அதிலும் இன்றைய அவர்களைக் குறித்தான எதிர்மறை உணர்வுகள் மனதில் பாரத்தை ஏற்படுத்தி விட்டது. அதிலும் குறிப்பாக உங்கள் குரு நித்ய சைதன்ய யதி அவர்களை ஒரு இந்துத்துவ அரசதிகார அடிவருடி இழிவு செய்து எழுதியதை குறிப்பிட்டு உள்ள இடம் வந்தவுடன் என்னையறியாமல் அழுது விட்டேன். மனம் உடைந்து விட்டது
 இந்திய நாட்டைப் பீடித்திருக்கும் இந்த இந்துத்துவப் புற்றுநோய் இல்லாமல் ஆகட்டும்.
 உங்கள் பணி நீடுவாழ் இருக்கும்.
அன்புடன்
அ.லவ்சன் சாம் துரைராஜ்.
அன்புள்ள லவ்சன்,
மத அடிப்படைவாதம் என்றுமே மெய்யான ஆன்மிகத்திற்கு எதிரானதாகவே இருக்கும். ஆனால் மெய்யான ஆன்மிகம் எந்நிலையிலும் எதற்கும் எதிரானது அல்ல.
நன்றி
ஜெ
முந்தைய கட்டுரைநியாயகுசுமாஞ்சலி