மேலைத்தத்துவம் அறிமுகம்
அஜிதன் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு ஒருமுறை நிகழ்ந்துள்ளது. கலந்துகொண்டவர்கள் தத்துவம் அளிக்கும் கற்றல் அனுபவம் என்ன என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள். நவீன வாழ்க்கை, நவீன அறிவியல் அனைத்தைப்பற்றியும் சிந்தனையில் ஒரு தொடக்கம் நிகழ்ந்ததாக எழுதியிருந்தனர். இன்றைய நவீனக்கல்விபெறும் எவரும் அடைந்தே ஆகவேண்டிய முழுமையான பயிற்சி இது.
ஒட்டுமொத்தமாக மேலைத்தத்துவத்தை புரிந்துகொள்வதே முறையான தொடக்கம். எங்களால் இந்திய தத்துவ வகுப்புகளும் அவ்வாறே நடத்தப்படுகின்றன. மேலைத் தத்துவத்தின் அடிப்படை வினாக்கள் என்ன, அவர்கள் அடைந்த விடைகளும் விவாதங்களும் என்னென்ன, அவற்றை நிகழ்த்தியவர்கள் எவர் என அறிவதுதான் உகந்தது. அதன்பின் ஒவ்வொரு புள்ளிகளாகத் தொட்டு விரிவாக்கிக்கொள்ளலாம். நாம் உதிரி வரிகளாக, மேற்கோள்களாக, இன்னின்னார் என பெயர் வரிசையாக அறிந்திருப்பது சரியான அறிமுகம் அல்ல.
மேலைத்தத்துவ அறிமுகம் நம் இலக்கியவாசிப்பை, திரைரசனையை சட்டென்று துலக்கிவிடுவதைக் காணலாம். நம் சிந்தனையே ஒழுங்கமைவுக்குள் வரத்தொடங்கும். நாம் வாழும் மேலைப்பண்பாட்டுச்சூழலை அர்த்தபூர்வமாக அறிய தொடங்குவோம்.
இந்த வகுப்பில் மேலைத்தத்துவம் ஒட்டுமொத்தமாகவும், அதன் அடிப்படையான நவீன ஜெர்மானிய தத்துவம் (காண்ட், ஹெகல்.ஷோப்பனோவர், நீட்சே) முதன்மையாகவும் கற்பிக்கப்படும்.
டிசம்பர் 27,28 மற்றும் 29 அன்று நிகழும்.
தொடர்புக்கு
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை
வைணவ இலக்கிய அறிமுகம்
வைணவ பக்தி இலக்கிய அறிமுகம் ஜா.ராஜகோபாலன் மீண்டும் நடத்துகிறார்.
வைணவ பக்தி இலக்கியம் தமிழின் மொழியழகை, இலக்கிய நயங்களை அறிவதற்குரிய அரசப்பெருவழி. கம்பராமாயணம் உள்ளிட்ட பேரிலக்கியங்களுக்குள் நுழைவதற்கான வழியும்கூட. அதற்கப்பால் , அது ஒரு மகத்தான ஆன்மிகக்கல்வி. மானுட உணர்வு நிலைகளின் உச்சங்கள் வழியாக தத்துவத்தை, மெய்யியலைச் சென்று தொடுவது அப்பயணம்.
மரபிலக்கியத்தை எளிதாக, நேரடியாகப் பயிலமுடியாது. பொருளுணர்வது கடினம். அதைவிட உளநிலை அமைவது கடினம். உரிய ஆசிரியரிடமிருந்து கற்பதென்பது ஒரு பெருந்தொடக்கம்
நாள் December 13 -14 -15
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்
இந்திய தத்துவ அறிமுகம் இரண்டாம் வகுப்பு
ஜனவரி 2025 மாதம் 3, 4 5 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் இந்திய தத்துவத்தின் இரண்டாவது நிலை வகுப்புகள் நிகழவுள்ளன.
(இடங்கள் நிறைவடைந்தன. அடுத்த இரண்டாவது தத்துவ வகுப்பு பிப்ரவரியில் நிகழும். இவ்வகுப்புக்கு விண்ணப்பிக்கவேண்டாம்)
- இந்து மதத்தை கற்று அறிய வேண்டுமா?
- இந்துமதம் தத்துவமும் வளர்ச்சியும்
- இந்து தத்துவத்தை எப்படிக் கற்கிறேன்?
- இந்து மதத்தை கற்று அறியவேண்டுமா?
- இந்திய தத்துவ மரபை ஏன் கற்கவேண்டும்
- மெய்ஞானத்தைக் கற்பிக்கும் தகுதி என்ன?
- யாருக்கு தத்துவம் தேவை?
- வேதாந்தக் கல்வி எதற்காக?
- மதத்தில் இருந்து தத்துவத்தை பிரிக்கமுடியுமா?
- நீங்கள் ரஜினியா கமலா?
- தத்துவம் செயலின்மைக்கு இட்டுச்செல்லுமா?
- மதங்களில் உறையும் படிமங்கள்
- வேதங்களை எல்லோரும் கற்கமுடியுமா?
- ஆசாரங்கள் எதுவரை தேவை?
- ஆன்மிகத்திற்கு அறிவியல் விளக்கம் தேவையா?
- சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?
- சேர்ந்தா தனித்தா உங்கள் பயணம்?
- மதங்களில் உறையும் படிமங்கள்
யோகம்- உளம் அடங்கல் பயிற்சி
என்னிடம் பெரும்பாலானவர்கள் கேட்கும் சில கேள்விகள் உண்டு. ‘ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் வேலைசெய்வீர்கள்?’ நான் அதற்கு இயல்பாக ‘சாதாரணமாக 15 மணி நேரம். அதுவும் முழுக்கவனத்துடன்’ என்று பதில் சொல்வேன். உடனே அடுத்த கேள்வி “நீங்கள் தூங்குவதே இல்லையா?” .அதற்கு என் பதில். “ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் நல்ல தூக்கம் எனக்கு உண்டு. தூங்குவதனால்தான் வேலை செய்கிறேன். நான் நன்றாகத் தூங்காத ஒருவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டேந்”
அதன்பின் ஓர் ஆழ்ந்த அமைதி உருவாகும். பின்னர் அடுத்த கேள்வி “எப்படி அப்படி தூங்க முடிகிறது?”. அதே வினாவை எனக்கு அணுக்கமானவர்களும் கேட்பார்கள். “எப்படி எந்த இடத்திலும் படுத்ததுமே தூங்கிவிடுகிறீர்கள்?”. அதற்கான பதில் ஒன்றே. “எனக்கு மனதை அடங்கவைக்கத் தெரியும். நான் விரிவான யோகப்பயிற்சிகள் செய்பவன் அல்ல. ஆனால் கற்றுக்கொண்ட பயிற்சிகள் முப்பத்தைந்து ஆண்டுகளாக அளிக்கும் முதன்மைப் பயன் இதுவே”
இன்றைய வாழ்க்கை நம்மை சீண்டிக்கொண்டும், சிதறடித்துக்கொண்டும் இருக்கிறது. தொலைக்காட்சி, சினிமா, இணையம் உட்பட இன்றைய ஊடகங்கள் எல்லாமே அடிப்படையில் விளம்பரம் சார்ந்தவை. அவை நம்மைச் சீண்டி அழைத்துக்கொண்டே இருக்கின்றன. நம்மை நிலைகுலையவும் கொந்தளிக்கவும் வைக்கின்றன. அதாவது இன்றைய உலகமே நம்மை அமைதியிழக்கச் செய்யும் இயல்பு கொண்டது. இன்று ஊடகம் மிகப்பிரம்மாண்டமான தொழிலாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே ஊடகம் பெருகிவிட்டிருக்கிறது. அத்தனை ஊடகங்களும் சேர்ந்து நம் கவனத்தைச் சிதறடிக்கின்றன. நம் அகத்தை மையமில்லாததாக, தறிகெட்டு பாய்வதாக ஆக்கிவிட்டிருக்கின்றன.
இன்றைய சூழலில் எந்த தளத்திலேனும் எதையேனும் சாதிக்க விரும்புபவர்களின் ஒரே நிபந்தனை உள்ளத்தை தொகுப்பதும் குவிப்பதும் எப்படி என்பதே. அதற்கு உள்ளத்தைக் கவனிக்கும் பயிற்சி தேவை. உள்ளத்தை கவனித்து, அதைக் கையாளத்தெரிந்தவர்கள் அதை அடங்கவைக்கவும் முடியும். இந்த தளம் சார்ந்து வினாக்கள் வந்துகொண்டே இருந்தமையால்தான் யோக- தியானப் பயிற்சிகளை எங்கள் தத்துவ- இலக்கிய பயிற்சிகளுடன் இணைத்துக்கொண்டோம்.
குரு சௌந்தர் இன்று மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பரந்துபட்ட அளவில் வகுப்புகளை நடத்தும் முதன்மையான யோகப்பயிற்சியாளர். முறையான யோகப்பயிற்சி அளிப்பவர் என தனிப்பட்ட முறையில் நான் அறிந்தவர் (அதில் என்னென்ன பிழைகள் நிகழும் என நன்கறிந்துள்ளேன் என்பதனால் என் தெரிவு மிக கடுமையான ஆய்வுக்குப் பின்னரே நிகழ்ந்தது) குரு சௌந்தரின் வகுப்புகள் அளித்த விடுதலையை, தொடக்கத்தை இப்போது பலநூறு பேர் பதிவுசெய்துள்ளனர். இவை வெறும் உடற்பயிற்சிகள் அல்ல. அகப்பயிற்சியும்கூட.
குரு சௌந்தர் நடத்தும் அடுத்த நிகழ்வு வரும் ஜனவரி 10, 11 மற்றும் 12 (வெள்ளி சனி ஞாயிறு)
ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்யலாம்
தொடர்புக்கு [email protected]
யோகமும் தியானமும் ஒன்றா- சௌந்தர் காணொளி
- மூன்றுவகை யோகமுறைகள்
- ஊடகம் எனும் Matrix
- உணவடிமைகள்
- ஊக்கத்தின் செயல்திட்டம்
- இயற்கையோகம்
- யோகத்தின் இன்றைய தேவை என்ன?
- உளச்சோர்வின் ஊற்றுக்கண்
- கவனம், கடிதம்
- இன்றைய உளச்சோர்வுகள்
மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்
ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர் ‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது போலிருக்கே’ என்று எனக்கு எழுதினார்கள். ஏனென்றால் நம் மரபுஞானம் அனைத்தும் செய்யுளிலேயே உள்ளன. அவற்றை நேரடியாகப் பயில ஆரம்பிப்பவர் ஒரு பெரும் புதையலறையின் வாசலைத் திறக்கிறார்.
நாம் மதம், ஆன்மீகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். மிக எளிய வாட்ஸப் செய்திகளையே அதற்குச் சார்ந்திருக்கிறோம். உண்மையிலேயே அவற்றை அறிய மரபுசார்ந்த நூல்களைப் பயின்றாகவேண்டும். அதற்கு செய்யுளை உள்வாங்கும் திறன் தேவை.
அதன்பொருட்டே வைணவ இலக்கியம், சைவ இலக்கியம் சார்ந்த பயிற்சிகளை அளிக்கிறோம். மரபுக்கவிதைகளை வாசிப்பதற்கான பயிற்சி, ரசிப்பதற்கான வழிகாட்டு நிகழ்வு ஒன்றை அமைக்கலாமென்னும் எண்ணம் எழுந்தது. மரபின் மைந்தன் முத்தையா நடத்திய சென்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மரபிலக்கியத்துக்குள் நுழைவது இத்தனை எளியதா என்ற திகைப்பை எழுதியிருந்தனர்.
எளிதுதான், கற்பிப்பவரின் ரசனையே அதற்கான அடிப்படை. வெறுமே இலக்கணப்பாடமாக, தகவல்களாக கற்பிக்கமுடியும். ஆனால் ரசனையினூடாகக் கற்பித்தால் அது ஒரு பெரும் களியாட்டாக அமையும். மரபிலக்கியத்தை பின்னாலிருந்து தொடங்கி வரலாற்றுஒழுக்காக கற்பிப்பதே கல்விக்கூட வழிமுறை. நம் எளிய ரசனையில் இருந்து தொடங்கி விரித்தெடுத்துக்கொண்டே சங்ககாலம் வரைச் செல்வதே டி.கே.சிதம்பரநாத முதலியார் (ரசிகமணி) உருவாக்கிய மரபு.
அம்மரபின்படி இன்று மரபிலக்கியம் கற்பிப்பவர் மரபின்மைந்தன் முத்தையா.குற்றாலத்தில் டி.கே.சி. விழாவில்தான் 2000 வாக்கில் அவரை நான் முதலில் சந்தித்தேன். சாரல்மழையுடன் மூன்றுநாட்கள் மரபிலக்கியத்திலேயே தோய்ந்து இருந்த நாட்கள் அவை.
முத்தையா மீண்டும் மரபிலக்கிய வகுப்புகளை நடத்துகிறார்
நாட்கள் ஜனவரி 17 18 மற்றும் 19
தொடர்புக்கு [email protected]
மரபும் கொண்டாட்டமும்
மரபின்பம்
மரபை இனிமையென அறிதல்