அன்புள்ள ஜெ
நியாயகுசுமாஞ்சலி நூல் பற்றிய உங்கள் காணொளியை பார்த்தேன். சுருக்கமான, ஆனால் மிகச்செறிவான உரை. அதில் நியாயவியலின் படி பிரம்மம் (கடவுள்) உண்டு என்பதற்கான தர்க்கங்களைக் கண்டேன். நான் நாத்திகன். ஆனால் இந்த நியாயத்தர்க்கங்கள் ஆச்சரியமளிக்கின்றன. வழக்கமாக ஆத்திகர்கள் தர்க்கபூர்வமாகப்பேசுவதில்லை. நம்பிக்கையை மட்டுமே முன்வைப்பார்கள். தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே சொல்வார்கள். இந்த விரிவான நியாயத்தர்க்கங்களை எதிர்கொள்வது நாத்திகர்களுக்குக் கடினம்தான். எந்த அளவுக்கு தீவிரமான விவாதங்கள் நடந்துள்ளன என்று தெரிந்துகொள்ள முடிகிறது. ஆச்சரியம் அடைந்தேன்.
சாந்தகுமார்











