நவீன மருத்துவ நிபுணரும், மருத்துவப் பேராசிரியருமான மாரிராஜ் அவர்கள் ஏற்கனவே நவீன மருத்துவத்தை பொதுவான ஆர்வம் கொண்டவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகுப்பை நமக்காக நடத்திருக்கிறார். மீண்டும் அந்த வகுப்புகள் நடைபெற உள்ளன.
நவீன மருத்துவத்தை ஒரு சிந்திக்கும் மனிதர் ஏன் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்?
அது நமது வாழ்க்கையின் எல்லா தருணங்களுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. நோய் வந்த பிறகுதான் நாம் மருத்துவத்தை நாடுகிறோம். ஆனால் நோயின்றி உடலைப் பேணிக் கொள்வதற்கு இன்னும் அதிகமாக அதை நாம் நாடியாக வேண்டும். அதற்கு நம் உடலின் கட்டமைப்பு, நம் உடல் செயல்படும் முறை, அதற்கும் சூழலுக்குமான உறவு, அதில் வரும் நோய்கள், ஆகியவற்றைப் பற்றிய ஒரு அறிமுகம் நமக்கு அவசியம்.
நவீன மருத்துவம் என்பது மருத்துவர்களுக்கு மட்டும் உரிய ஓர் அறிவுத்துறை அல்ல. அது ஓர் அறிவுத்துறை. அதற்கென்று ஒரு தர்க்கமுறையும் ஒட்டுமொத்தமான ஒரு பிரபஞ்ச தரிசனமும் உண்டு. உண்மையில் அதை கற்றுக்கொள்ளுவதென்பது பரவசமூட்டும் ஒரு கல்வியனுபவம் என்பதை சென்ற வகுப்புகளை பங்கெடுத்தவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மாரிராஜ் போன்ற ஒரு மருத்துவநிபுணரின் நேரம் என்பது மிக அரிதானது. நம் நண்பர் என்பதனால்தான் இந்த வகுப்புக்கு அவர் நேரம் ஒதுக்கியிருக்கிறார்.ஆகவேதான் இந்த வகுப்பு அடிக்கடி நடைபெற டியவில்லை.
இந்த வகுப்பில் யோகம் மற்றும் தியானம் பயில்பவர்கள் பங்குகொள்ளலாம், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய தெளிவை அடையமுடியும்
இலக்கிய வாசகர்கள், நவீன ஐரோப்பிய சிந்தனையில் ஈடுபாடு கொண்டவர்கள் இதில் பங்கெடுக்கலாம். சென்ற பல நூற்றாண்டுகளாக மேலைத் தத்துவம் மெதுவாக உருவாக்கியெடுத்த பிரபஞ்ச தரிசனத்தின் நடைமுறை வடிவம் என்று நவீன மருத்துவத்தைச் சொல்லலாம். ஒரு சிந்தனைக்கட்டமைப்பாக நவீன மருதத்துவத்தை அறிய முற்படுகிறவர்களும் இதில் பங்கெடுக்கலாம்.
இது மருத்துவ முகாம் அல்ல. நோய்களுக்கு சிகிச்சையோ, மருத்துவ ஆலோசனையோ வழங்கப்படுவதில்லை. ஆனால் தன்னது நோயைப் பற்றி அறிய விரும்புவவர்கள் நவீன மருத்துவ முறையின் அடித்தளத்தை அறிந்துகொண்டு மேலதிகமாக புரிந்துகொள்ள இது உதவும்.
நவீன மருத்துவம் பற்றி தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைகள், பொய்ப் பிரச்சாரங்கள் எண்ணற்றவை. கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அவநம்பிக்கையின் மீதுதான் இங்கே மாற்று மருத்துவம் என்று தொழிலே நடந்துக் கொண்டிருக்கிறது. நவீன மருத்துவம் உண்மையில் என்ன என்று தெரிந்துக்கொள்வது நாம் போலிமருத்துவத்தில் ஏமாறாதிருக்க, சரியான மருத்துவத்தையும் மருத்துவரையும் தெரிவு செய்ய உதவும்.
இது நம்மைச் சூழ்ந்துள்ள, நாம் தவிர்க்கவே முடியாத, நம்முடைய உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிற, எந்த தருணத்திலும் நமக்குத் தேவைப்படும் ஓர் அடிப்படையான அறிவுத்துறை குறித்து ஒரு ஆழ்ந்த அறிமுகத்தை பெறுவதாகும்.
அனைவரையும் வரவேற்கிறோம்.
நாட்கள் ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9
தொடர்புக்கு [email protected]

வெண்முரசு நாள் – குருபூர்ணிமா விழா 2026
ஆடி மாதம் முழுநிலவுநாளை வியாசர் பிறந்த நாளாக வியாசபூர்ணிமை என்றும், வியாசனே இந்திய மரபின் முதன்மை ஆசிரியன் என்பதனால் குருபூர்ணிமை என்றும் கொண்டாடுவது இந்தியா முழுக்க இருந்துவரும் வழக்கம்.
ஆண்டுதோறும் குருபூர்ணிமா நாளை ‘வெண்முரசு நாள்’ ஆகக் கொண்டாடுவது, வெண்முரசு நிறைவடைந்த ஆண்டு முதல் எங்கள் அமைப்பில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு மரபு.
இந்த ஆண்டு இவ்விழா ஜூலை 29 (புதன்) மற்றும் ஜூலை 30 (வியாழன்) ஆகிய இரு தினங்களில், ஈரோடு அருகிலுள்ள எங்கள் மலைத் தங்குமிடத்தில் நடைபெறுகிறது.
விழாவில் வெண்முரசு குறித்த கலந்துரையாடல்கள், மகாபாரதம் சார்ந்த கலைநிகழ்வுகள் மற்றும் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறும். குருஜி சௌந்தர் மற்றும் ஈரோடு கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வை முன்னெடுப்பார்கள்.
ஜூலை 31, ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் குருஜி சௌந்தர் நடத்தும் யோகப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
குருபூர்ணிமா விழாவில் மட்டும் பங்கேற்க விரும்புவோர் தனியாக விண்ணப்பிக்கலாம். அவர்கள் புதன் மதியம் முதல் வியாழன் மதியம் வரை நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
யோகப் பயிற்சியிலும் பங்கேற்பவர்கள், அதற்காக முன்கூட்டியே வந்து தங்கி, குருபூர்ணிமா விழாவிலும் கலந்துகொள்ளலாம். அதனை தனியாகக் குறிப்பிட வேண்டும்.
வெண்முரசு வாசகர்கள், நண்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் 29 ஜூலை மதியம் முதல் 30 ஜூலை மதியம் வரை
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்

ஆகஸ்ட் இரண்டாவது வாரம் 15, 16 தேதிகளில் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா நிகழ்வதனால் அந்த வார இறுதியில் வகுப்புகள் இல்லை

கஸல் இசை,சூஃபி கலை மற்றும் உருது இலக்கிய அடிப்படைகள் அறிமுகம்
சூஃபி மரபில் வந்த அறிஞரும், கவிஞரும், பாடகருuம், அலங்கார எழுத்துக்கலை நிபுணருமான ஃபயாஸ் காதிரி நடத்தும் வகுப்புகள் மீண்டும் நடைபெற உள்ளன.
இந்த வகுப்பில், இந்தியாவின் கலைமரபில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இஸ்லாமிய- சூஃபி கலை மரபு பற்றிய அறிமுகம் நிகழும். கசல் இசை அதன் ஒரு ஒளிமிக்க முகம். அலங்கார எழுத்து முறை இன்னொரு கலை வடிவம். சூஃபி கவிதை மரபு மூன்றாவதாக முக்கியமானது.
உருது இலக்கியக்-கலை மரபு என்று அதை ஒட்டுமொத்தமாகச் சொல்லலாம். பாரசீகக் கலை, அரபியப் பண்பாடு, மற்றும் தொன்மையான இந்திய பண்பாடு ஆகியவற்றின் கலவையாக இந்தியாவிலே உருவாகி வந்த இந்த மரபுக்கு தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்த துணை மரபு உண்டு, என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
நம் தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இஸ்லாமியக் கலை-இலக்கியம் பற்றி இங்கு தமிழ் பண்பாடென்றும் சமகால மரபென்றும் பேசிக் கொண்டிருப்பவர்கள் முழுமையான அறியாமையிலேயே இருக்கிறார்கள். அது சிந்தனை அளவிலே நமக்கு மிகப்பெரிய குறைபாடுதான். அதன் பொருட்டுதான் இந்த வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
கசல் இசைப் பாடகர், உருது இலக்கிய அறிஞர், அரபு உருது எழுத்துக்களை நிபுணருமாகிய ஃபயாஸ் காதிரி இந்த எல்லா கலை வடிவங்களையும் மூன்று நாள்களின் எளிமையாக அறிமுகம் செய்கிறார். ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் மகிழ்ச்சியான கற்றலனுபவத்தை அளிக்கும் வகுப்புகளாக இவை முன்பு நிகழ்ந்தன. மீண்டும் நிகழவுள்ளன.
அனைவரையும் வரவேற்கிறோம்.
நாள் ஆகஸ்ட் 21, 22, 23
தொடர்புக்கு [email protected]
பெண்களுக்கு மட்டுமான இலக்கியப் பயிற்சி அரங்குகள்

வாசகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஜெயமோகன் நடத்தும் பெண்களுக்கான இலக்கிய அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் நிகழ்கின்றன. இலக்கியம் எழுதுவது, வாசிப்பது, விவாதிப்பது ஆகியவற்றுக்கான வகுப்புகள் மற்றும் உரையாடல் இவற்றில் நிகழும்.
நாள் ஆகஸ்ட் 28 29 மற்றும் 30
தொடர்புக்கு [email protected]












