பதஞ்சலி யோகப்பயிற்சிகள்.

 

 

இந்திய அளவிலும் ,உலகின் பல நாடுகளிலும் இன்று அறியப்படும் யோகப்பயிற்சியாளராகத் திகழ்பவர் நண்பர் சௌந்தர். பொதிகைத் தொலைக்காட்சியில் யோகப் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்.

யோகத்தை ஒரு பயிற்சிமுறையாக மட்டும் அன்றி, அதன் தத்துவம் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றுடன் இணைத்து ஒரு முழுமையான கல்வியாக அளிக்கும் தகுதி கொண்ட ஆசிரியர் அவர். பிகாரின் சத்யானந்த யோகமரபின் பயிற்சி பெற்று ‘குரு’ என்னும் பட்டம் பெற்றவர். முறையான மரபுத்தொடர்ச்சி, தத்துவ அறிமுகம்,  தன் மாணவரின் வளர்ச்சிக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவை கொண்ட யோகப் பயிற்சியாளர்கள் இன்று மிக குறைவானவர்கள்தான். அவர்களில் ஒருவர் சௌந்தர்.

யோகப் பயிற்சி முறைகளை தொடர்ச்சியாக நாங்கள் நிகழ்த்தி வருவதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று இன்றைய வாழ்க்கை முறை. நாம் வாழும் சூழலும், நம் லைச்சூழலும் ந்ம் உடலை செயலுக்கு எதிரானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் உள்ளத்தில் செயல் குறித்த திட்டங்களும், கனவுகளும் கொண்டிருப்பிலும்கூட எதையும் செய்ய முடியாத ஒரு தயக்க நிலையிலேயே வாழ்வின் பெரும்பாலான காலங்களை வீணடித்துக் கொண்டிருப்பதற்கான முதன்மைக் காரணம் நம் உடல் செயலூக்கத்துடன் இல்லை என்பதுதான். உடல் மீது உள்ளத்தின் கட்டுப்பாடு இல்லாதவர்களால்  தொடர்ச்சியாகச் செயலாற்ற முடியாது. அவ்வப்போது  உடனடி ஊக்கம் உருவாகி, தீவிரமாகச் செயலை தொடங்கி, சலிப்படைந்து மெல்ல அதை கைவிடுவதே நிகழும்.

நம் உடல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கை முறை பெரும்பாலும் ஒரே நிலையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதாக உள்ளது. மூளை மட்டுமே செயல்படவேண்டியுள்ளது. ஆனால் உடலின் ஒரு பகுதியாகிய மூளை உடலின் நிலையையே தானும் கொண்டிருக்கும். உடல் தயாராக என்றால் அது சோர்வடையும். காபி ,டீ போன்ற பல்வேறு மூளைத்தூண்டிகள் வழியாக நாம் மூளையை உந்தி உந்தி செயல்பட வைக்கிறோம். ஆனால் அவற்றுக்கு எல்லை உண்டு.

உடலுக்கு உரிய பயிற்சி அளிப்பது மட்டுமே அதற்குரிய சிறந்த வழி. உடலின் உள்ளுறுப்புகள் அனைத்திற்கும் பயிற்சி அளிப்பது யோக முறை மட்டுமே. ஆகவேதான் தொடர்ச்சியாக யோக முறையை முழுமையறிவு சார்பில் சிந்திக்கும் செயல்படும் அனைவருக்கும் பரிந்துரைத்து தொடர்ந்து வழங்கி வருகிறோம். தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாழ ஆயிரம் பேர் இப்பயிற்சிகளைப் பெற்று இருக்கிறார்கள். மீண்டும் வகுப்பு நிகழ்வுள்ளது.

முன்பு இப்பயிற்சி பெற்றவர்கள் கூட வெவ்வேறு வாழ்க்கைச் சூழலால் பயிற்சிகளை நிறுத்திவிட்டிருக்க கூடும். அவர்கள் மீண்டும் அந்த அடிப்படைப் பயிற்சியை அடைவது என்பது மீண்டும் தொடங்குவதற்கும் நீடிப்பதற்கும் உதவும்

நாள் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 2

தொடர்புக்கு [email protected]

அறிவிக்கப்பட்ட வகுப்புகள் – இடமிருப்பவை

அஜிதன் நடத்தி வரும்   மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள் இப்போது உலகின் வேறு நாடுகளின் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்க மேலைத்தத்துவப் பேராசிரியர்களும் அஜிதனின் விரிவான கல்வியை உணர்ந்து, நேரடி உரையாடலில் உள்ளனர். அமெரிக்க அறிஞர் ஒருவருடனான ஒர் உரையாடல் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது.

ஐரோப்பிய தத்துவம் மிக விரிவானது. அதை  அறிமுகம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல. ஆனால் எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவு தூரம் நமது புரிதலை மேம்படுத்தி, நம்மை அறிதலின் உவகையை நோக்கிக் கொண்டு செல்வது அது.

சமகால அரசியல் கோட்பாடுகள், சமூகவியல் கோட்பாடுகள், உளவியல் கோட்பாடுகள் மட்டுமல்ல; இன்றைய நிர்வாகவியல் கோட்பாடுகளுக்குக்குக்கூட அடிப்படையாக அமைந்திருப்பவை மேலைச்சிந்தனைகளே. நம் கல்வியும் தொழிலும் தொழில்நுட்பமும் எல்லாமே அதன்மேல்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆகவே மேலைத்தத்துவச் சிந்தனையை அறிந்திருப்பதென்பது இன்றுள்ள தொழில் உட்பட அனைத்தையுமே ஆழமாகவும் ஒட்டுமொத்தமாகவும் புரிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையை அளிப்பது.

இன்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒரு குறைந்தபட்சக் கல்வி என்று இதைச்சொல்லலாம்.ஆகவே தான் இதற்கு இத்தனை வரவேற்பு  உலகமெங்கும் இன்று உள்ளது. தமிழகத்தில் மேலைச்சிந்தனையை முறையாக அறிமுகம் செய்யும் முதன்மையான வகுப்பு என்றே இதைச் சொல்ல முடியும்.

பழைய கிரேக்கச் சிந்தனையில் இருந்து தொடங்கி, இன்றுள்ள தத்துவ சிந்தனைகளை வரை மூன்று நாட்களில் செறிவாகவும் தீவிரமாகவும் அறிமுகம செய்யும் வகுப்பு இது. ஒவ்வொரு தத்துவ சிந்தனையும் என்ன சொல்கிறது என்று அஜிதன் மேற்கோள் பாடம் நிகழ்த்துவதில்லை. மாறாக நவீன மனிதன் எதிர்கொள்ளும் அறம் ,அதிகாரம், உறவுகள், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவு என வெவ்வேறு தளங்களில் எழும் அடிப்படைக் கேள்விகளை தொட்டுச் சிந்திக்கச் செய்து அதன் விடைகளை புகழ்மிக்க தத்துவ சிந்தனையாளர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று விளக்குகிறார்.

அந்தக் கல்வி என்பது சிந்திப்பவர்களுக்கு அறைகூவலானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவஞானியில் தங்களுக்கான சிந்தனையாளனை கண்டுகொள்கிறார்கள். சிலர் நீட்சேயில். சிலர் ஹெகலில். சிலர் ஷோப்பனோர்வரில். அந்தக் கண்டடைதல் வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு தொடக்கம்.

ஆர்வம் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

நாட்கள் ஜூலை 24 25 மற்றும் 26

தொடர்புக்கு [email protected]

வரவிருக்கும் நிகழ்வுகள்

நவீன மருத்துவ அறிமுக வகுப்புகள்

நவீன மருத்துவ நிபுணரும், மருத்துவப் பேராசிரியருமான மாரிராஜ் அவர்கள் ஏற்கனவே நவீன மருத்துவத்தை பொதுவான ஆர்வம் கொண்டவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகுப்பை நமக்காக நடத்திருக்கிறார். மீண்டும் அந்த வகுப்புகள் நடைபெற உள்ளன.

நவீன மருத்துவத்தை ஒரு சிந்திக்கும் மனிதர் ஏன் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்?

அது நமது வாழ்க்கையின் எல்லா தருணங்களுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. நோய் வந்த பிறகுதான் நாம் மருத்துவத்தை நாடுகிறோம். ஆனால் நோயின்றி உடலைப் பேணிக் கொள்வதற்கு இன்னும் அதிகமாக அதை நாம் நாடியாக வேண்டும். அதற்கு நம் உடலின் கட்டமைப்பு, நம் உடல் செயல்படும் முறை, அதற்கும் சூழலுக்குமான உறவு, அதில் வரும் நோய்கள், ஆகியவற்றைப் பற்றிய ஒரு அறிமுகம் நமக்கு அவசியம்.

நவீன மருத்துவம் என்பது மருத்துவர்களுக்கு மட்டும் உரிய ஓர் அறிவுத்துறை அல்ல. அது ஓர் அறிவுத்துறை. அதற்கென்று ஒரு தர்க்கமுறையும் ஒட்டுமொத்தமான ஒரு பிரபஞ்ச தரிசனமும் உண்டு. உண்மையில் அதை கற்றுக்கொள்ளுவதென்பது பரவசமூட்டும் ஒரு கல்வியனுபவம் என்பதை சென்ற வகுப்புகளை பங்கெடுத்தவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மாரிராஜ் போன்ற ஒரு மருத்துவநிபுணரின் நேரம் என்பது மிக அரிதானது. நம் நண்பர் என்பதனால்தான் இந்த வகுப்புக்கு அவர் நேரம் ஒதுக்கியிருக்கிறார்.ஆகவேதான் இந்த வகுப்பு அடிக்கடி நடைபெற டியவில்லை.

இந்த வகுப்பில் யோகம் மற்றும் தியானம் பயில்பவர்கள் பங்குகொள்ளலாம், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய தெளிவை அடையமுடியும்

இலக்கிய வாசகர்கள், நவீன ஐரோப்பிய சிந்தனையில் ஈடுபாடு கொண்டவர்கள் இதில் பங்கெடுக்கலாம். சென்ற பல நூற்றாண்டுகளாக மேலைத் தத்துவம் மெதுவாக உருவாக்கியெடுத்த பிரபஞ்ச தரிசனத்தின் நடைமுறை வடிவம் என்று நவீன மருத்துவத்தைச் சொல்லலாம். ஒரு சிந்தனைக்கட்டமைப்பாக நவீன மருதத்துவத்தை அறிய முற்படுகிறவர்களும் இதில் பங்கெடுக்கலாம்.

இது மருத்துவ முகாம் அல்ல. நோய்களுக்கு சிகிச்சையோ, மருத்துவ ஆலோசனையோ வழங்கப்படுவதில்லை. ஆனால் தன்னது நோயைப் பற்றி அறிய விரும்புவவர்கள் நவீன மருத்துவ முறையின் அடித்தளத்தை அறிந்துகொண்டு மேலதிகமாக புரிந்துகொள்ள இது உதவும்.

நவீன மருத்துவம் பற்றி தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைகள், பொய்ப் பிரச்சாரங்கள்  எண்ணற்றவை. கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அவநம்பிக்கையின் மீதுதான் இங்கே மாற்று மருத்துவம் என்று தொழிலே நடந்துக் கொண்டிருக்கிறது. நவீன மருத்துவம் உண்மையில் என்ன என்று தெரிந்துக்கொள்வது நாம் போலிமருத்துவத்தில் ஏமாறாதிருக்க, சரியான மருத்துவத்தையும் மருத்துவரையும் தெரிவு செய்ய உதவும்.

இது நம்மைச் சூழ்ந்துள்ள, நாம் தவிர்க்கவே முடியாத, நம்முடைய உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவருக்கும்  தேவைப்படுகிற, எந்த தருணத்திலும் நமக்குத் தேவைப்படும் ஓர் அடிப்படையான அறிவுத்துறை குறித்து ஒரு ஆழ்ந்த அறிமுகத்தை பெறுவதாகும்.

அனைவரையும் வரவேற்கிறோம்.

நாட்கள் ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9

தொடர்புக்கு

ஆகஸ்ட் இரண்டாவது வாரம் 15, 16 தேதிகளில் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா நிகழ்வதனால் அந்த வார இறுதியில் வகுப்புகள் இல்லை

கஸல் இசை,சூஃபி கலை மற்றும் உருது இலக்கிய அடிப்படைகள் அறிமுகம்

சூஃபி மரபில் வந்த அறிஞரும், கவிஞரும், பாடகருuம், அலங்கார எழுத்துக்கலை நிபுணருமான   ஃபயாஸ் காதிரி நடத்தும் வகுப்புகள் மீண்டும் நடைபெற உள்ளன.

இந்த வகுப்பில், இந்தியாவின் கலைமரபில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இஸ்லாமிய- சூஃபி கலை மரபு பற்றிய அறிமுகம் நிகழும். கசல் இசை அதன் ஒரு ஒளிமிக்க முகம். அலங்கார எழுத்து முறை இன்னொரு கலை வடிவம். சூஃபி கவிதை மரபு மூன்றாவதாக  முக்கியமானது.

உருது இலக்கியக்-கலை மரபு என்று அதை ஒட்டுமொத்தமாகச் சொல்லலாம். பாரசீகக் கலை, அரபியப் பண்பாடு, மற்றும் தொன்மையான இந்திய பண்பாடு ஆகியவற்றின் கலவையாக  இந்தியாவிலே உருவாகி வந்த இந்த மரபுக்கு தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்த துணை மரபு உண்டு, என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

நம் தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இஸ்லாமியக் கலை-இலக்கியம் பற்றி  இங்கு தமிழ் பண்பாடென்றும்  சமகால மரபென்றும் பேசிக் கொண்டிருப்பவர்கள் முழுமையான அறியாமையிலேயே இருக்கிறார்கள். அது  சிந்தனை அளவிலே நமக்கு மிகப்பெரிய குறைபாடுதான். அதன் பொருட்டுதான் இந்த வகுப்புகள்  ஒருங்கிணைக்கப்படுகின்றன.

கசல் இசைப் பாடகர், உருது இலக்கிய அறிஞர், அரபு உருது எழுத்துக்களை நிபுணருமாகிய ஃபயாஸ் காதிரி  இந்த எல்லா கலை வடிவங்களையும்  மூன்று நாள்களின் எளிமையாக அறிமுகம் செய்கிறார். ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் மகிழ்ச்சியான கற்றலனுபவத்தை அளிக்கும் வகுப்புகளாக இவை முன்பு நிகழ்ந்தன. மீண்டும் நிகழவுள்ளன.

அனைவரையும் வரவேற்கிறோம்.

நாள் ஆகஸ்ட் 21, 22, 23

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரையோகமும் தியானமும்
அடுத்த கட்டுரைதத்துவம் என்ன அளித்தது?