அன்புள்ள ஜெ
தொழில்நுட்பக்கல்வி என்பது கல்வி அல்ல, அது ஒரு பயிற்சி மட்டுமே. சிந்திப்பதற்கான பயிற்சிதான் உண்மையான கல்வி. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் உண்மையில் கல்வியற்றவர்கள். அவர்கள் தங்கள் தொழிலில் வென்றிருக்கலாம். அவர்கள் தங்களை படித்தவர்கள் என நினைக்கலாம். சமூகம் அப்படி அவர்களை நினைக்கக்கூடாது. சமூகத்தின் சிந்தனையை நடத்திச்செல்பவர்களே உண்மையான கல்விமான்கள். இன்று இந்தியாவில் வெறும் மருத்துவ- பொறியியல் தொழில்நிபுணர்களை கல்வியாளர்களாகக் கொண்டாடும் போக்கு உள்ளது. இங்கே அறிவியல்கூட கல்வியாக கருதப்படுவதில்லை. இந்நிலை மாறவேண்டும். உங்கள் காணொலி கூர்மையாக இந்த கருத்தை முன்வைத்தது.
ஜெயசிங் ராஜசேகர்











