ஜெயமோகன் அவர்களுக்கு.
தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மனிதன் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்.காட்டில் வாழ்ப்பவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இயற்கை.இயற்கையை ரசிப்பவன் அழகுணர்ச்சி கொண்டவனாக இருப்பான்.பள்ளிகளில் கல்வி போட்டிகளாகி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது குழந்தைத்தன்மை மறைந்து குழந்தைகளிடம் முதுமை தன்மை காணப்படுகிறது.அடித்து கனிய வைக்கும் பழங்கள் போல.பத்து வயதில் கல்லூரி பாடத்திட்டத்தை செயல் படுத்த துவங்கியாகி விட்டது. இதில் பெற்றோருக்கு பெருமை.பின் எப்போது குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்.ஒன்றை செய்வதினால் கிடைக்கும் மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி.
பறவை பார்த்தல் படிப்பது எழுதுவது ஆகியற்றில் மகிழ்ச்சி.பிரதிபலன் எதிர்பார்த்து செய்வதில் மகிழ்ச்சி கிடைக்காது.சில நாட்களுக்கு முன்பு ஒரு சிற்றூந்தின் பின்னால் ஒரு வாசகம் பார்த்தேன்.”மகிழ்வித்து மகிழ்.” உண்மைதானோ?
காண கண் கோடி வேண்டும். கோவில் என்றாலும் வீடு என்றாலும்.மனமே முருகனின் மயில் வாகனம் திவ்ய தரிசனம் என்பது மனதின் தரிசனம்.கோவில்களில் விற்கும் கட்டண தரிசனம் அல்ல.ஒரு நிகழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியம் அதன் மூலம் கிடைக்கும் வருகை சான்றிதழ் அல்ல. ஆங்கிலத்தில் சொல்வார்களே.Take away. அது அல்ல. என்ன அனுபவித்தோம்.எப்படி மகிழ்ந்தோம்.வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணம் உடையவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
தா.சிதம்பரம்.
தோவாளை.











