ஆலயப்பயிற்சி, இரண்டாம் நிலை
இது வரை நிகழ்ந்த ஆலயப்பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டவர்களுக்கான அடுத்த நிலை பயிற்சி இது. இதில் ஓர் ஆலயத்தில் மேற்கொண்டு கற்கவேண்டியவை, கவனிக்கவேண்டியவை எவை என ஆசிரியர் பயிற்றுவிப்பார்.
அத்துடன் இக்கல்வியை எப்படி நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக்குவது என்றும் கற்பிப்பார். ஓர் ஆலயத்தை எடுத்துக்கொண்டு முழுமையாக அதை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி எப்படி ஒரு சிறு நூலாக எழுதுவது என்பது ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
சிறு குழுவாக ஆகி இதை செய்வது செய்பவர்களுக்கும் ஆழ்ந்த கவனத்தையும், ஆலயக்கலை சார்ந்த பயிற்சியையும் அளிக்கும். நம் ஆலயங்ளைப் பதிவுசெய்யும் பெரும்பணியையும் தொடங்கியவர்கள் ஆவோம்
நாள் ஆகஸ்ட் 16 17 மற்றும் 18 (வெள்ளி, சனி, ஞாயிறு)
==============================================
எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru
Our English Website unifiedwisdom.today
எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்
எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்
எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta
இடமிருக்கும் நிகழ்வுகள்
கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு
சிறில் அலெக்ஸ் நடத்திய முந்தைய பைபிள் வகுப்பு பற்றி வந்த எதிர்வினைகள் மூன்று கோணங்களில் இருந்தன. பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வு அது. எதிர்வினைகளும் இளைஞர்களிடமிருந்தே
- பைபிள் வகுப்பு மிகமிக உணர்ச்சிகரமானதாக இருந்தது. பல இடங்கள் நெகிழ்வில் கண்ணீர் வருமளவுக்கு கவித்துவமும் ஆன்மிகமுமான எழுச்சி கொண்டிருந்தன. மதம் என்னும் சொல்லையே இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது. நாம் வேறுமதத்தைச் சார்ந்தவர் என்றாலும் அந்த மதத்தை புதியதாக பார்க்க ஆரம்பிப்போம். தத்துவார்த்தமான புதிய கோணம் உருவாகியது.
- பைபிள் என்பது மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பண்பாட்டு வரலாறும் அடங்கியது என்று புரிந்தது. பைபிளின் அடிப்படைத்தத்துவ அறிமுகமில்லாமல் ஐரோப்பிய சினிமாக்களைப் பார்ப்பது வீண். அவற்றை புரிந்துகொண்டோம் என நினைப்பது அசட்டுத்தனம். ஐரோப்பிய இசை,ஐரோப்பிய இலக்கியம் எல்லாவற்றையுமே பைபிள் வழியாகவே சரியாகப்புரிந்துகொள்ள முடியும்
- பைபிள் அறிமுகம் என்பது என் தொழிலுக்கு முக்கியமானது என்று தெரிந்தது. என் தொழிலில் என்னுடன் தொடர்புகொள்ளும் ஐரோப்பியர், அமெரிக்கர் பலர் கிறிஸ்தவர்கள். அவர்களின் மதக்கொள்கை என்ன என்றே தெரியாமல் இருப்பது என்னை முட்டாளாகக் காட்டிவிடும் என புரிந்தது. ஏனென்றால் என் மதம் பற்றி அவர்கள் கொஞ்சம் தெரிந்துகொண்டே வருகிறார்கள்.
முறைப்படி கிறிஸ்தவ இறையியல் பயின்றவரான நண்பர் சிறில் அலெக்ஸ் நவீன வாசகர்களுக்காக பைபிளின் ஆன்மிகத்தையும் அழகியலையும் வரலாற்றையும் கற்பிக்கிறார். இவ்வாறு பைபிள் அறிவார்ந்து மட்டுமே கற்பிக்கப்படும் இன்னொரு இடம் இல்லை.
ஆன்மிகமாக பைபிளைச் சென்றடைவது ஓர் ஆழ்ந்த பயணம். எந்த ஆன்மிகப்பயணிக்கும் இன்றியமையாதது. ஆனால் இது மதக்கல்வி அல்ல. இதனுடன் வழிபாடோ பிரார்த்தனையோ இணைக்கப்படுவதில்லை. ஒருவர் ஆன்மிகமான தன் பயணம் வழியாக பைபிளை அறிவதற்கான கல்வி மட்டுமே.அத்துடன் பிற மெய்யியல்களுடன் இணைத்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை, அகவிரிவை அடைவதற்கான பயிற்சியும்கூட
ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
வைணவ இலக்கிய அறிமுக முகாம்
நாலாயிரத் திவ்யபிரபந்தமே வைணவ தத்துவம் தோன்றிய விளைநிலம். அதை அறிவார்ந்து அணுகுவதும், அதன் தமிழ்ச்சுவையை அறிவதும் இன்றைய தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கு மிக இன்றியமையாதது. அறியாதவர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிட முடியும். இதற்கு முன் நான்கு வகுப்புகள் வைணவ இலக்கிய அறிமுக முகாம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொன்றும் மிகப்பெரிய அறிதலாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றே கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)
இஸ்லாமிய மெய்யியல் – இலக்கிய அறிமுகம்
இந்தியப் பண்பாட்டின் ஓர் அம்சமாக இஸ்லாம் பலநூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் இஸ்லாம் குறித்த புரிதல் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமில்லை. அப்புரிதல் இல்லாமல் இந்திய வாழ்வில் ஒருமைப்பாடு அமையாது. நமக்குத்தேவை ‘சகிப்புத்தன்மை’ அல்ல ‘புரிதல்’.
இஸ்லாமின் மெய்யியல்களில் ஒன்றான சூஃபி மரபு இந்திய ஆன்மிகச் சிந்தனையில், இந்திய கலைகளில் (குறிப்பாக இசையில்) மிகப்பெரிய பங்களிப்பாற்றிய ஒன்று. அதை உணராமல் இந்திய இலக்கியத்தையும் கலையையும் முழுதறிய இயலாது.
இஸ்லாமிய அரசியல்வாதிகளிடமிருந்து எவரும் அப்புரிதலை அடையமுடியாது, அவர்கள் பிரிவினையையே முன்வைப்பார்கள். இஸ்லாமிய மெய்யியலை அறிந்தவர்களிடமிருந்தே அப்புரிதலை அடையமுடியும். இன்று வெறுப்பும் பிரிவினைநோக்கும் ஓங்கியுள்ள சூழலில் ஆழ்ந்து அறிதலே இச்சூழலுக்கு எதிரான மெய்யான எதிர்வினையாக அமையும்.
இஸ்லாமியர்கூட இன்று இஸ்லாமை இரண்டு வகையிலேயே அறியமுடியும். மதம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும். மெய்யியல் சார்ந்து அறிய அதற்கு மட்டுமே உரிய வகுப்புகள் மிக அரிது.
தமிழ்ப்பண்பாட்டின் முக்கியமான ஒரு கூறு தமிழ் இஸ்லாம். தமிழின் காவியமரபு, தமிழின் சிற்றிலக்கிய மரபு இரண்டிலும் பெரும்பங்களிப்பு கொண்டது. அதை தமிழிலக்கிய வாசகர், தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலர் அறிந்திருக்கவேண்டும்.
கவிஞர், இஸ்லாமிய ஆய்வாளர் நிஷா மன்ஸூர் நடத்தும் இவ்வகுப்பில் இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன் மெய்யியல், அதன் உலகளாவிய சூஃபி மரபு, தமிழ் சூஃபி இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்
ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)
தொடர்புக்கு [email protected]
இடங்கள் நிறைந்தவை
பௌத்த மெய்யியல்- தியானம். நாள் ஜூலை 5,6 மற்றும் 7 தேதிகளில் நிகழ்கிறது (வெள்ளி, சனி ,ஞாயிறு)( இடங்கள் நிறைவுற்றன)

அபுனைவு வாசிப்புப் பயிற்சி ஜூலை 19 மற்றும் 20 தேதிகள். (வெள்ளி, சனி)(இடங்கள் நிறைவுற்றன)
தத்துவம் முதல் வகுப்புஆகஸ்ட் 2,3 மற்றும் 4 (வெள்ளி, சனி, ஞாயிறு) அன்று அறிவிக்கப்பட்டிருந்த தத்துவம் முதல் வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன.
அடிப்படை யோகப்பயிற்சி
நாள் ஜூலை 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)
(இடங்கள் நிறைவுற்றன)
வரவிருக்கும் நிகழ்வுகள்
செப்டெம்பர் வரை
(இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்)
ஜெர்மானிய தத்துவ அறிமுகம்
ஜெர்மானிய தத்துவம் கான்ட் முதல் ஹைடெக்கர் வரை. ஓர் அறிமுகம்.
நடத்துபவர் அஜிதன்.
ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)
மேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன் . நான்காவது வகுப்பு.
நாள் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1
வி.அமலன் ஸ்டேன்லி நடத்தும் பௌத்த மெய்யியல்- விபாசனா அமர்வுகள் மீண்டும் நிகழ்கின்றன.
நாள் செப்டெம்பர் 6,7 மற்றும் 8 (வெள்ளி, சனி, ஞாயிறு)
இந்திய தத்துவம் முதல் வகுப்பு
இந்திய தத்துவ இயல் முதல் நிலை வகுப்பு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பில் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் முதல்நிலை வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.
செப்டெம்பர் 13,14 மற்றும் 15 (வெள்ளி சனி ஞாயிறு)
தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி
மரபின் மைந்தன் முத்தையா மரபிலக்கியத்தில் முறையான பயிற்சியும் நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். அவர் நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள் நிகழும். சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரையிலான தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியும் அவற்றை வாசிக்கும் முறையும் கற்பிக்கப்படும். இது இலக்கணப்பயிற்சி அல்லது தகவல்பயிற்சி அல்ல. முழுக்க முழுக்க இலக்கிய ரசனைப் பயிற்சி மட்டுமே
செப்டெம்பர் மாதம் 20 22 மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)




















