அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம், இவ்வருடம் புத்தாண்டு அன்றே உங்களை சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது, வெள்ளிமலை நித்யவனத்தில் Introduction of Indian Philosophy Classes Jan 2,3 & 4 நாட்களில்!
உங்களை முதல் முறை மதுரை புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். உங்களுக்கான இடத்திலே உங்களை எப்பொழுதும் சந்திப்பது உற்சாகத்தை அளிக்கிறது (உலகம் முழுக்க பயணம் செய்கிறீர்கள், இன்றைய சூழலில் உங்கள் இடம் என்பது பரந்து விரிந்தது)
விடுமுறையில் இந்தியா வந்தபொழுது இந்த வகுப்பு அமைந்தது dream come true moment.வகுப்பிற்கு இரண்டு நாட்கள் முன்புதான் பழனி பாதயாத்திரையில் இருந்து திரும்பி இருந்தேன்.ஆன்மீகமும், தத்துவமும் பாரதத்தின் இரு கண்கள் என்றே சிந்திக்கிறேன்.
உடல்நலக்குறைவு இருந்த பொழுதும் பொருட்படுத்தாமல் 3 நாட்களும் சிறப்பாக பயிற்றுவித்தீர்கள்!நித்யாவனத்தின் ரம்மியமான சூழலில் மனம் ஒருமுகமாகியது.வகுப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் உங்கள் சிந்தனை செறிவால் மடை திறந்தாற்போல் மொழியை கடந்து தெளிவாக அமைந்தது.இறுதி நாளில் அதிகாலையில் பூரண சந்திர ஒளியில் உங்கள்முன் கூடியது ஒரு எழுச்சியான தருணம் தான்!
உங்கள் குழுவின் செயல் மற்றும் கருணையினாலே இது போன்ற வகுப்புகள் எல்லோருக்கும் சாத்தியமாகின்றது.மாணவர்கள் அனைவரும் அன்பாக நடந்துகொண்டார்கள். உங்கள் வாசகர்களுடன், உங்களை அறிந்தவர்களுடன் நேரில் பழகியது இதுவே முதன்முறை.
நீங்கள் விரைவாக சாப்பிடுவர்கள் என்று ஒரு கட்டுரையில் வாசித்திருந்தேன், நேரிலும் கண்டுகொண்டேன்!வகுப்பிற்குபின் இந்திய தத்துவம் குறித்த ஒரு விசாலமான பார்வையும் & இது முதல் படிதான் என்ற தெளிவும் உள்ளது.
குரு உங்களுக்கும், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அன்னமிட்ட அந்தியூர் மணி அண்ணா அவர்களுக்கும், சூடாக, சுவையான உணவு செய்த அம்மாவிற்கும், வாட்ச்மேன் அய்யாவிற்கும் எங்களின் நன்றியும், வணக்கங்களும்!
என்றும் அன்புடன்
சோமசுந்தரம் (காரைக்குடி / Texas)












