தத்துவம், கடிதம்

நான் ஒன்பதாவது படிக்கும்போது மிகவும் பிடித்தமான ஒரு பூகோள ஆசிரியர் இருந்தார். அவரது கற்பித்தலின் சிறப்பம்சம் அதன் கட்டமைப்பு. கண்ணிமைக்காமல் அவரையே கூர்ந்து கவனிக்கிற மாதிரி வகுப்பை எடுப்பார். தேர்வுக்காலங்களில் எந்த ஒரு தயாரிப்பும் இல்லாமல் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடிந்தது. கடந்த 13-15 தேதிகளில் உங்களது தத்துவ வகுப்புகளின் வழியாக நான் அவரை மீண்டும் நினைவு கூர்ந்தேன். நன்றி

இந்த வகுப்புகளில் நான் உணர்ந்த இரண்டு முக்கியமான விஷயங்கள்:

  1. எந்த நல்ல அனுபவத்திற்கும் வயதும் உடல்நிலையும் ஒரு பொருட்டல்ல
  2. இயற்கையோடு இணைந்து நடக்கிற நிகழ்வுகள் அனைத்தும் நினைவில் பசுமரத்தாணியாக பதிகின்றன

இந்த சுகானுபவத்திற்கு எனது வணக்குத்துக்குரிய நன்றிகளை தெரிவிப்பதற்கு முன் ஒரு விஷயம். நான் இளமைக்காலங்களில் ஜெயகாந்தனின் பரம விசிறி. உங்களதுசிருஷ்டிகீதத்திலிருந்து சிகாகோ வரைபிரம்மதத்துவ உரை என்னை மீண்டும் பரவசத்திலாழ்த்தியது. உள்ளபடியே ஒரு காலப்பயணம்..

மீண்டும் நன்றி கலந்த வணக்கங்கள்

நந்தகுமார்

முந்தைய கட்டுரைஇயற்கையில் உறையும் இறை
அடுத்த கட்டுரைஇயற்கையில் மலர்தல்