கீதையை அறிதல், வாசிப்புப் பயிற்சி

பண்பாட்டின் மலர்வு

அன்புள்ள ஜெ,

வணக்கம்

டம்மி வாசகன்/

இந்த கட்டுரை படித்ததில் இருந்து, நான் மண்புழு போல வாசிக்கிறேனோ? என்ற ஐயம்  எனக்குள்ளே வந்தது. எப்படி சரியாக வாசிப்பது என்றும் தெரியவில்லை. இந்தத் கேள்வி மனதுக்குள், உறுத்திக் கொண்டே இருந்த சமயத்தில்தான் நண்பர் ராஜேஷின் முயற்சியை பற்றி தெரிந்து கொண்டேன். தேதி தெரியாததால், முதலிலேயே பதிவு செய்ய இயலவில்லை. தங்கள் தளத்தில் தேதியை பார்த்தவுடன் பதிவு செய்து விட்டேன்

தங்களை நேரில் சந்திக்கும் தருணத்தை பற்றி பலவகையான கனவுகள் இருந்தபோதிலும், எனக்குப் பிடித்த வெள்ளி மலையில், அது நிகழ்ந்தது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. இரண்டரை நாட்கள் உங்களுடன் இருந்து கற்க முடிந்தது எனது பெரும் பேறு

கட்டுரைகளை வாசிக்க, உரைகளை கேட்க மற்றும் புனைக் கதைகளை  புரிந்து கொள்ள கற்றுக் கொடுத்தீர்கள்

எனது பயிற்சிக்காககீதையை அறிதல்புத்தகத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறேன்

நானும், ஈஸ்வரியும் சேர்ந்து வசிக்கிறோம். வாரம் ஒரு முறை(புதன்கிழமை) கலந்துரையாடலும், ஐந்து வாரத்தில் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். நீங்கள் கொடுத்த பட்டியலில் இப்புத்தகம்  இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த ஆண்டு கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியில்  வாங்கி இருந்தேன். வெண்முரசு முதற்கனலை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது. உரை என்பதால் இறுதியில் நீங்கள் Summarize செய்து கூறுவதை, என் Synopsis உடன் ஒத்து பார்த்து, தவறு செய்த இடங்களை திருத்திக் கொள்ள முடிகிறது. (A book with answer key for our exercise.)

எங்களை மேம்படுத்திக்கொள்ள பெரும் வாய்ப்பாக இருக்கும் முழுமையறிவு  வகுப்புகளை நடத்துவதற்கு, எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. ஆனாலும் சொல்கிறேன், மிகவும் நன்றி ஜெ

என்றும் அன்புடன்

S.ராஜேஷ்வரி

கோவை.

 

கீதையை அறிதல் வாங்க

முந்தைய கட்டுரைவிபாசனாவின் விடுதலை
அடுத்த கட்டுரைஓர் இஸ்லாமியரின் கடிதம்