பணத்தின் மதிப்பு, கடிதம்.

 

je,

தமிழில் இன்று அதிகமாக பேசப்படும் விஷயம் என்பது சுதந்திரம். எழுத்தாளனின் சுதந்திரம் வாசகனின் சுதந்திரம் என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அந்த சுதந்திரம் என்பது ஒருவர் தன் பணத்தால் ஈட்டிக் கொள்ளப்பட வேண்டியது என் உங்களுடைய பார்வை மிக அரிதான ஒன்று. பணம் என்ற சொல்லால் அர்த்தப்படுத்தப்படுவது உண்மையில் சுதந்திரம்தான். எல்லா வகையிலும் சுதந்திரம். பொருளாதாரச் சுதந்திரம். சிந்திப்பதற்கான சுதந்திரம். எழுதுவதற்கான சுதந்திரம். ஏன் உழைக்காமல் இருப்பதற்கான சுதந்திரம்கூட பணத்தால்தான் வருகிறது.

ஆகவே தனக்கு எதற்காக பணம் தேவை என்று ஒருவர் முடிவு செய்து விட்டார் என்றால், அவரால் அதற்கான பணத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்றால், அவர தன் சுதந்திரத்தை ஈட்டி கொள்கிறார என்று பொருள். தனக்கு தேவையில்லாத பொருளுக்காக ஒருவர பணத்தை செலவழிக்கிறார  என்றால் தன் சுதந்திரத்தை அதற்கு செலவழித்து விட்டார என்று தான் பொருள். எனக்கு தெரிந்து இசை கலைஞராக வேண்டும் எழுத்தாளராக வேண்டும் என்றெல்லாம் பெரிய கனவுகளுடன் நிற்கும் பலர் வீடு வாங்கியும் கார் வாங்கியும் கடனில் சிக்கி அந்த கடனை அடைப்பதற்காக மொத்த வாழ்க்கையின் செலவிட்டு அழிந்து சென்றிருக்கிறார்கள். தனக்கு தேவையில்லாத ஒன்றிற்காக தன் சுதந்திரத்தை விட்டு விட்டார்கள் என்று தான் அவர்களை நான் புரிந்து கொள்கிறேன்.

தன் மொத்த உழைப்பையும் கொண்டு ஒரு வீடு வாங்கும் ஒருவர் தன் நேரம் ,தனிமை, தன கனவுகள் அனைத்தையும் கொடுத்து அந்த வீட்டை வாங்குகிறார். அந்த வீடு அதற்கான மதிப்புடையதா என்ற கோணத்தில் அவ்சர் பார்ப்பதில்லை. பெரும்பாலும் ஒரு கௌரவத்திற்காகவும் சமூக மதிப்புக்காகவும்  அந்த வீட்டை வாங்கி விடுகிறார். ஒரு வீடு வாங்கி வாழ்நாள் முழுக்க கடனை அடைக்கும் ஒருவர் கொத்தடிமையாக தன் வாழ்க்கை எழுதிக் கொடுத்துதான் அந்த வீட்டைப் பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

உங்களுடைய பேச்சு பலவிதமான சிறப்புகளை உருவாக்குவதாக இருந்தது. நன்றி.

சாம் ஆனந்த்

முந்தைய கட்டுரைபடைப்பூக்கம், குழந்தைகள்