நாம் எவரை வழிபடுகிறோம்?

 

அன்புள்ள ஜெ

நீங்கள் இந்தக் காணொலியில் சொல்லியிருக்கும் இதே விஷயம் பத்தாண்டுகளுக்கு முன் என் வாழ்வில் நிகழ்ந்தது. ஓர் ஐரோப்பிய நண்பர் வந்திருந்தபோது என்னிடம் கேட்டார். உங்கள் ஊரில் இருக்கும் சிலைகள் எல்லாமே உங்கள் அரசியல்தலைவர்களுக்குரியவை. நிறைய நடிகர்களின் சிலைகள்.  ஏராளமான சிலைகள். தெருத்தெருவாக அவர்களின் சிலைகள் உள்ளன. ஆனால் அறிஞர்கள், அறிவியலாளர்கள், பொறியியல் நிபுணர்களின் சிலைகள் எங்கே?

அவை எல்லாம் அரசியல்வாதிகள் அவர்களே வைத்துக்கொண்ட சிலைகள் என்று நான் பதில் சொன்னேன். சிந்தனையாளர்கள், அறிவியலாளர்களுக்கு இங்கே இடமில்லை. ஏனென்றால் சிலை வைப்பதென்பது ஒருவகை பிரச்சாரம். நாங்களே முக்கியமானவர்கள் என்று அவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள். அதை நாமும் நம்புகிறோம். நம் பாடநூல்களிலேயே கூட சிந்தனையாளர்கள் இல்லை. அரசியல்வாதிகளையே நாம் சிந்தனையாளர்களாக பள்ளியில் படிக்கிறோம். நாம் ஏன் இத்தனை பின்தங்கிய தேசமாக இருக்கிறோம் என்றால் அதற்கான காரணம் இதுவே.

ஆராவமுதன் தேசிகன்

முந்தைய கட்டுரைசிந்தனைப் பயிற்சி