படைப்பூக்கம், குழந்தைகள்

ஜெ,

படைப்பூக்கம் கொண்ட குழந்தைகளைப் பற்றிய காணொலியைப் பார்த்தேன். ஒரு படைப்பாளியாக நீங்கள் உங்கள் பிள்ளைகளையும் படைப்பாளிகளாக, சிந்தனையாளர்களாக ஆக்கவேண்டும் என்று எண்ணியது தமிழ்ச்சூழலில் மிக அரிய ஒரு செயல். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இலக்கிய அறிமுகமே உருவாகக்கூடாது என்று நினைப்பதும் அவர்களை தொழில், வணிகம் ஆகியவற்றுக்காகவே வளர்ப்பதும், அவர்கள் சமூக அந்தஸதை அடைந்துவிட்டார்கள் என்றால் மகிழ்ச்சி அடைவதும்தான் இங்கே காணக்கிடைக்கிறது. அந்நிலையில் தன் மகன், மகள் எழுத்தாளர் என்பதனால் ஒருவர் மகிழ்ச்சியும் நிறைவும் அடைவதும் மிக அரிதான ஒன்று. அதை இங்குள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் படைப்புமனத்துக்கு உகந்த ஒரு வாழ்க்கையை உருவாக்கி அளித்தீர்கள். அவர்களுக்குரிய மேடைகளை அளிக்க முயற்சி எடுக்கிறீர்கள். ஆனால் அவர்கள் அந்த முயற்சி தேவையற்ற அளவுக்கு தகுதி கொண்டவர்கள் என்பதும் முக்கியமானது. நான் அஜிதன் அவர்களின் கதைகள், கட்டுரைகளை பார்க்கிறேன். அவருடைய தத்துவ வகுப்புகளுக்குச் செல்கிறேன். உங்களை விட ஒரு படி மேலான கூர்மைகொண்டவர் என்பதே என் மதிப்பீடாக உள்ளது. அவர் சர்வதேச அளவில் அறியப்படவேண்டும், அதற்கான வாய்ப்புகள் அமையவேண்டும் என விரும்புகிறேன்.

செல்வ.ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைவேதாந்தம், கடிதம்