திறத்தல் எனும் பணி…

ஜெ,

சவுத் பவுண்ட் தொடர்ந்து பல புதிய பக்கங்களைத் திறந்து கொண்டிருக்கிறது. வழக்கமான ஓர் இளைய தலைமுறைக்கான தளமாக மட்டும் இல்லாமல், சுவாரஸ்யமான உரையாடல்களுக்கான ஒரு திறந்த களமாக அது உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

பிற களங்களில் நடைபெறும் உரையாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில், இங்கே பல்வேறு துறைகளைச் சேர்ந்த கருத்துகளும் பார்வைகளும் சந்திக்கின்றன. இன்று எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியாமலும், வாசிப்பிலும் சிந்தனையிலும் ஆர்வம் இல்லாமலும் இருக்கும் இளைஞர்களை இந்தத் தளத்திற்குள் அழைத்து வருவதற்கு இது ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தீவிரமான படைப்புகளையும் சிந்தனைகளையும் சுவாரஸ்யமான உரையாடல் வடிவில் முன்வைக்கும் இந்த முயற்சி, இன்னும் அதிகமான இளைஞர்களை படைப்புலகிற்குள் ஈர்க்கும் என்று நம்புகிறேன். சவுத் பவுண்ட் தொடர்ந்து வளர்ந்து, புதிய தலைமுறைக்கும் இலக்கியத்திற்கும் இடையே ஒரு முக்கியமான பாலமாக அமைய வேண்டும். என் மகன் கொஞ்சம் இலக்கியம் படிப்பான். அவனுக்கான சில பக்கங்களை அவனே அடையாளம் கண்டுகொண்டு படித்துக் கொண்டிருக்கிறான். மேலும் இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். அதற்காக நீங்களோ உங்கள் குழுவோ கல்லூரிகளுக்குச் சென்று அறிமுகம் செய்வதும் உதவியாக இருக்கலாம்.

ஆர். அரசு

முந்தைய கட்டுரைதமிழும் உலகும்