ஆலயக்கலை, ஹம்பி பயணம்- கடிதம்

சென்ற வருட ஹம்பி பயணத்தின் இறுதி நாள் அன்று மாலை துங்கபுத்திரா நதிக்கரையில் அமர்ந்து ஆலயக்கலை ஆசிரியரிடம்,  நண்பர்கள்  குழுவினர் அடுத்த பயணம் “அஜந்தா– எல்லோரா” போகலாமா எனக் கேட்ட போதே இப்பயணத்தின் துவக்க விதை விழுந்து விட்டதுநான் ஏற்கனவே 2011 ஜனவரி மற்றும் 2019 டிசம்பர் என இருமுறை மூன்று மூன்று நாட்கள் அஜந்தா எல்லோராவை பார்க்க வந்துள்ளேன்ஆனால் ஒவ்வொரு முறையும் முழுதாய் பார்க்காதது போலவே இருக்கும்.  இந்த 13 வருட இடைவெளியில் அஜந்தா பற்றிய நூல்கள், youtube கலெக்சன், pdfகள் என சிலவற்றை சேகரித்து வந்தேன்ஆனால் இன்றளவும் முழுதாக படித்து முடிக்க முடியவில்லை.பள்ளி நாட்களில் இந்தியக் கலைகள் பற்றி வரலாற்று பாடத்தில் தான் முதல் முறை  அஜந்தா என்ற ஓவியங்கள் பற்றி பார்த்துள்ளேன்  . பிறகு ராணி முத்து என்ற மாத பத்திரிக்கையில் “30 நாளில் தபால் மூலம் ஓவியங்கள் கற்கலாம்” இப்படிக்கு அஜந்தா ஸ்கூல் ஆஃப் மேன் ஆர்ட்ஸ் …. என்று ஒரு விளம்பரம் வந்து கொண்டே இருக்கும்அதில் பத்மபாணியின் உருவம் இருக்கும்.

 பிறகு கல்லூரி முடித்து வேலைக்கு சென்ற பிறகுஒரு சந்தர்ப்பத்தில் ஏகே செட்டியார் அவர்களின் பயண கட்டுரை புத்தகத்தை படித்துவிட்டு 2011ல் ஜனவரி மாதம் அவுரங்காபாத் சென்று அதிகாலை மொழி புரியாமல் ஏதோ ஒரு பஸ்ஸை பிடித்து அஜந்தா பார்க்கிங் போய் இறங்கினேன்அங்கிருந்து அவர்கள் பஸ் மூலம்  ஏறி,  ‌ அங்கே நுழைவாயில் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஒரு 50 படிகள் ஏறி அஜந்தாவின் முகப்பை அடைந்தேன்.  திடீரென கண் முன்னே ஒரு சமதள உச்சி கொண்ட ஒரு குன்று இரண்டாக பிளந்து நின்று கொண்டு இருந்ததுஏற்கனவே புத்தகங்களில் படித்தது போல் அது ஒரு ஆறு  கோடிக்கணக்கான வருடங்களாக  செதுக்கிய ஒரு பாறை என்பதை  காண முடிந்தது.   நீரிலும்  வெயிலிலும் காலம்காலமாக  செதுக்கப்பட்ட அந்த பாறையின்  ஒருபுறத்தில் சில தூண்களும் நுழைவாயிலுமாக அஜந்தா  காட்சி அளித்ததுயார் மனதில் உதித்திருக்கும் இந்த பெருங்கருணை.? இது உதித்த அந்த கணம் ஒரு பொன்னான தருணம் தானே.ஏற்கனவே இயற்கையான குகைகளில் மனிதன் வாழ்ந்து அங்கேயே வரைந்தது தான் இதற்கு வழிகாட்டி என்றாலும் புத்தனை குருவாகக் கொண்டு இதை நிகழ்த்திய செயல் அபாரமானது.

அஜந்தாவை அணுகும் போது நாம் இரண்டு விதமாக  வைத்துக் கொள்ளலாம் 

அஜந்தாவின் கலையம்சம் (கட்டிடம் ஓவியம் சிற்பம்)    

இந்த கலை நம் கலை மனதோடு உரையாடும் ஒரு ஆன்மீக  அம்சம்.

1. அஜந்தா எனும் அட்சய பாத்திரம் 

 

தக்காண பீடபூமியின் சஹ்யாத்ரி மலை தொடரில் உள்ள இந்துயாத்ரி மலைத்தொடரில் தான் அஜந்தா உள்ளது. Waghur ஆறு  பல்லாயிரம்  ஆண்டுகளாக இந்த மலையை அறுத்து ஓடி ஓடி ஒரு குதிரை குளம்பில் வடிவத்தை ஏற்படுத்தி உள்ளது . அந்த வடிவத்தை பார்க்கும் போது  பிரம்மபுத்திரா நதி நங்கஆபர்வத்தை சுற்றி ஒரு U turn எடுத்து உலகிலேயே மிகப்பெரிய ஒரு பாறை பிளவை  உருவாக்கி இருப்பது என் நினைவில் வந்தது. … அது போலவே இது ஒரு மெய் மறக்கும் காட்சி தான்இந்த எரிமலை குழம்புகளால் ஆன இந்த பாறைகளை செதுக்கி நுணுகி நோக்கும் போது அது பல நுண் துகள்களையும் பச்சை வெண்மை செங்காவி வண்ண பாறை துகள்களை ஆங்காங்கே தனக்குள்  வைத்து இருக்கிறது தெரிகிறது.. எனவே சிற்பங்கள் நம்மூர்   கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பங்கள் போல் இருப்பதில்லைஅதற்காகத்தான் அதன் மேல் வண்ணம் பூசும் ஒரு முறை வந்திருக்கும் என்று தோன்றுகிறது . மேலும் அந்த சொரசொரப்பு தன்மை வண்ணக் கலவை பூசும் முன் செய்ய வேண்டிய ஒரு சுண்ணாம்பு கலவையை இறுகப்பற்றிக் கொள்ளும் தன்மையுடன் இருந்தது அவர்களுக்கு பேருதவியாக  இருந்திருக்கும்.

கட்டிடங்களில் அமைப்பை பொருத்தவரை விகாரை என்றும் கைத்தியம் என்றும் இரண்டாக இது பிரிக்கப்படுகிறதுவிகாரைகளில் முன்புறம் ஒரு முகப்பு ,ஒரு முகப்பு மண்டபம்அதில் நுழை வாயில்கள்ஜன்னல்கள்அதன் உள்ளே நுழைந்தவுடன் மிகப்பெரிய கூடும் இடங்கள்அதன் கூரையை தாங்க பெரிய பெரிய தூண்கள்அதன்பிறகு அடுத்ததாக ஒரு சுவர்அந்த சுவற்றில் இருந்து கருவறையில் நுழைவாயில்அந்த கருவறைக்குள் புத்தர் போதிசத்வர் பத்மபாணி வஜ்ரபாணி போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டு இருக்கின்றன . அதுபோக எங்கெங்கெல்லாம் முடியுமோ ஆங்காங்கே  பலவேறு ஜாதக கதைகளும் சிறிய நீதிக் கதைகளும் புத்தரின் வாழ்க்கை வரலாற்று பதிவுகளுமாக வண்ணங்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளதுஒட்டு மொத்தத்தில் ஒரு ஓவிய பெருங்கடலில் மிதக்கும் சிற்பத் தீவு போல  காட்சியளிக்கிறது அஜந்தாவின் சில குகைகள். ( குகை 1,2,16,17)

 சைத்தியங்களை பொருத்தவரை நீள வடிவ பரப்பு கொண்டு ஸூதூபிகளோடு காட்சி அளிக்கிறதுபெரும்பாலும் ஸ்தூபிகள் கொண்டது   முற்கால குகைகள்  என்றும்புத்தரின் உருவ சிலை கொண்ட குகைகள் எல்லாம் மகாயானக் குகைகள் என்றும் அழைக்கப்படுகிறதுஆனால் சில குகைகளில் புத்தரின்  உருவ சிலையும் ஸ்துபாவிலேயே   இருக்கிறதுதற்போதைய ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி இரண்டையும் சேர்க்கும் ஒரு முயற்சியாக கூட இது இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

 ஒட்டுமொத்தத்தில் அஜந்தாவில் இவ்வுலகையே சிற்பம் ஓவியம் என்ற இரண்டு கலைகள் மூலமாக அடக்கிவிட எத்தனித்த கலை மனத்தின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன் .

எத்தனை விதமான உணர்ச்சிகளுடன் ஆண்களும் பெண்களும் படைக்கப்பட்டுள்ளனர்.எத்தனை விதமான கடவுள்கள்தேவர்கள்எத்தனை விதமானபூதங்கள் எத்தனையோ விதமான அப்சரஸ்கள் யட்சன்கள் யட்சிகள் கின்னரர்கள் கிம்புருடர்கள் பிரேதங்கள் பேய்கள் பிசாசுகள் செடி கொடி மரங்கள் விலங்குகள் பறவைகள் …..

எத்தனை விதமான சமூக அடுக்குகள் … ராஜாக்கள் ராணிகள் சேடிகள் தோழிகள் நடன மங்கைகள்,  இசைகக்கலைஞர்கள்  உதவியாளர்கள் குதிரை ஓட்டிகள் யானை ஓட்டிகள்போர் வீரர்கள்   பிச்சைக்காரர்கள் குருடர்கள் குள்ளர்கள் சிறுவர் சிறுமியர் கைக்குழந்தைகள் இப்படி அத்தனையும் தீட்டி இருக்கிறார்கள்.மனித முகங்களில் எத்தனை விதமான கண்கள்புருவங்கள்கைபாவனைகள் முக பாவங்கள்நிற்கும் நிலைஉட்காரும்  முறைபிரசங்கம் செய்யும் முறை அதை அமர்ந்து கேட்கும் முறை வணங்கும் முறை….உதடுகள் பல வகைகள்சிகை அலங்காரங்களில் பல வகைகள் உடை அமைப்புகளில் பல வகைகள்

மேலும்,   பாசம் கோபம் தாபம் விரக்தி கருணை அன்பு பக்தி பரவசம் இப்படி எத்தனையோ உணர்ச்சிகளை கொட்டி இருக்கிறார்கள் கிரீடங்கள் வளையல்கள் மோதிரங்கள் காதணிகள் சங்கு வலைகள் தோள் வளைகள் இடுப்பு வளைகள் கழுத்து அணிகள் முத்து சரங்கள் முத்துமாலைகள்  கொத்துக்கள் தங்க ஆபரணங்கள் கிரீடங்கள்….. 

 புத்தர் சிலைகளிலும்போதிசத்வர் பிறவியில் வரும் கதாபாத்திரங்களிலும்பத்மபாணிவஜ்ரபாணி ஓவியங்களிலும் இருக்கும் தியான பார்வை அஜந்தாவின் தனித்துவமாய் இருக்கிறது.  மான்களின் பார்வை கூட அற்புதமாய் தீட்டப்பட்டுள்ளது எந்த ஓவியத்திலும் தரைதளப்பகுதி வெறுமனே காட்டப்படவில்லைஅனைத்தும் மலர்மயமாக இருக்கிறதுஎந்த ஓவியத்திலும் கூரைகளும் அலங்காரம் இல்லாமல் இல்லை அத்தனையும் முத்துச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒரு மிகப்பெரிய ஒரு வண்ணக் கூரையாக தான் உள்ளதுவிதவிதமான வடிவ தூண்கள் அந்த தூண்களில் அலங்காரங்கள் , விதவிதமான துவாரங்கள் துவார பாலகர்கள் யட்ச  துவாரம்சிம்ம துவாரம்நரக துவாரம் ….

இத்தனையும் ஜாதக கதைகளையும் புத்தரின் நான்கு முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளை கொண்டு மீண்டும் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது . போதிசத்வ பிறப்பிலே அவருக்கு வரும் சோதனைகளும் அவருக்கு வரும் தடுமாற்றமும் அதை அவர் எதிர்கொள்ளும் விதமும் இவை அனைத்திலும் காட்டப்பட்டுள்ளது.  அஜந்தா ஒரு அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம்தான் ஆனால் இங்கு அள்ளி தருவதற்கு உங்கள் உள் உறங்கி கிடக்கும்  மணிமேகலா கலைதெய்வம் விழித்தெழ வேண்டும் . அதற்குத்தான் ஆலயக்கலைப் பயிற்சி நமக்கு உதவுகின்றது . 

2. இப்போது அஜந்தா என்னும் அருட்பெருஞ்ஜோதி என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

 அழகுணர்ச்சியின் வழியாக நம்மை ஆட்கொண்டு ,ஆசுவாசப்படுத்தி நம் நனவிலி மனத்திற்குள் ஆழமாக இறங்க ஆரம்பிக்கும் அஜந்தாகண்கள் பழக பழக….  ஏன் இந்த பெண் இப்படி வியந்து பார்க்கிறாள் என்று நம்மை நினைக்க வைக்கிறதுநந்தாவின் திடீர் பிரிவால் நிலைகுலைந்த ஜனபாதகல்யாணியின் துயரம் நம்மையும் ஆட்டுகிறதுஆனால்  ஒரு துயரம் எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடியும்

 தன் வீட்டு வாசலில் தன் மனைவியையும் மகனையும் சந்திக்கும் அந்த பெருங்கணம் ….. ராகுலன் என்ற  பச்சை மண்ணின்  கண்கள்யசோதரையின் ஏக்கம் கொண்ட பார்வை  …. நிற்க முடியவில்லை என்னால்.! பைனாகுலரில் இந்த காட்சிகளை பார்க்கும்போது , நம்மை பிசைந்து விடுகிறதுஜாதகக் கதைகள் மூலமும் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சி மூலமும் இந்த அஜந்தா ஓவியங்கள் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறதுசிலநிமிட  நேரத்தில் நாம் அஜந்தா என்ற ஓவியக்கடலின் அமைந்த  சிற்பக் குன்றுகளின்  அடி ஆழங்களில் நுழைந்து விளையாடும் சிறு மீன்கள் போல உணர ஆரம்பிக்கலாம்

 ஜாதகக் கதைகளை இப்படி கரு கொண்டு அதற்கு உரு கொடுத்த இந்த கலை மனம் நம்மோடு இணை சேரும் தருணம் மிகவும் அற்புதமானதுஇப்படி எல்லாம் வரைய முடியுமா,  நம்முள் நிலைநிறுத்த முடியுமா என அசரவைக்கும் ஓவியப் பாங்கு !  கதை நம்முள்ளும் நம்மை அறியாமல் நுழைந்து கொள்கிறதுஅடுத்த கட்டமாக இந்த கதை எனக்குநமக்குமனித குலத்திற்கு என்ன உணர்த்த விரும்புகிறது?  என்னவாக இருக்கும் நம்மை என்னவாக மாற்ற விரும்புகிறது?  அஜந்தாவில் ஓவியம் மூலம் தியானம்  எப்படி சாத்தியமாகிறது?

இந்த அஜந்தா ஓவியங்களின் நோக்கம் தான் என்ன கேள்வி வருகிறது .! 

லௌகீக வாழ்க்கையின் துன்பம் துயரங்களிலிருந்து விடுபட்டு அன்பு கருணை வழியாக தம்மத்தை நோக்கிய பயணத்திற்கு மறுபிறவியற்ற ஒரு பயணத்திற்கும் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளுவது தான் இதன் நோக்கமாகொஞ்சம் ஆன்மீக ஆழத்தோடு செல்பவர்களுக்கு இப்படி புரிந்தால்,  சாதாரண பெரும்பான்மை மக்களுக்கு இது என்ன மாற்றத்தை தருகிறது

l எங்கே போனது இவ்வளவு பிரமாண்டமான பௌத்தம்தோன்றிய இடத்தில் இது நிலைக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன 

l அதை இந்நிலைக்கு ஆளாகியது பக்தி மார்க்கம் மட்டும் தானா

l அது தன்னில் கொண்டிருந்த பலவீனம் என்ன

 குகை 1ல் உள்ள போதிசத்வரின்  உருவமும் வஜ்ரபாணியின்  உருவமும்  ஆண் தன்மையை தாண்டி பெண்மை பொங்கி வழிகிறது . ஒருவேளை அன்பும் கருணையும் தாய்மையுடன் சம்பந்தப்பட்டதால் இருக்குமோ?  அம்மையப்பன் சித்தரிப்பின் மூலமாக இருக்குமோ?  அல்லது பால்பேதமற்ற மனிதத்தின் கருணை வடிவமா?  ஒசிந்து  நிற்கும் யானை அஜந்தாவில் உண்டு என ஜெயமோகன் ஏற்கனவே எழுதியுள்ளார்இங்கே கருணையும் அன்பும் ஆண்மைக்குள் கலந்து ஒசிகிறதுஇதை பற்றி ஆசிரியரிடம் விவாதித்த போது அவர் ஒரு அவலகோட்டீஸ்வரா சிலையின் [MET MUSEUM,NEWYORK]  உள்ளது எனச் சொன்னதாக ஞாபகம்செம்பு படிவமைதியை எங்களுக்கு பகிர்ந்தார்அது ஒரு  ” உலோக கவிதை” போல இருந்ததுபத்மபாணியின் கையில் பிடித்திருக்கும் தாமரை மலரின் நீலநிறம் இன்னும் கண்ணுக்குள் ஒளிர்கிறது. . வஜ்ரபாணியின் கையில் தீண்டியுள்ள மலரோ வெறும் மகரந்த கற்றைகளாய் விசிறி சிலிர்த்துக்  கொண்டிருக்கிறது இரு விரல்களுக்கு இடையில் . இந்த மயக்கத்தில் இருவரின் இடது கையையும் பார்க்கவேயில்லை.

 அஜந்தாவின் நோக்கம் நமக்குள் இருக்கும் பல கசடுகளையும் குப்பைகளையும் சுத்தப்படுத்தி,  புதர்மண்டி கிடக்கும் புத்தரை வெளி கொணர்வாகத்தான் இருக்கும்அஜந்தாவை ஏற்கனவே ஒரு முறை மனிதகுலம் புதர் மண்ட வைத்து விட்டது மீண்டும் அது நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்இப்போதும் அஜந்தாவை நாம் சுத்தமாக வைத்தால் அது நம்மை பரிசுத்தமாக வைக்கும்.  அஜந்தாவை சென்று பார்ப்பதற்கு முன் நாம் ஒரு தேவதத்தாவாகவோ அல்லது  ஒரு நந்தாவாகவோ இருக்கலாம்ஆனால் அஜந்தாவுடன் கலந்து உரையாட ஆரம்பித்தபின் இவர்கள் அனைவரும் கலைந்து நீர்த்துப் போவதை  உணர முடிகிறது.படிப்படியாகநம்மை போதிசத்துவராக மாற்றுவது தான் “அஜந்தா என்ற  அருட்பெருஞ்சோதியின் தனிப்பெரும் கருணையாக …” இருக்குமோ ?

 அன்பும் கருணையும் தான் அருமருந்துஒரே மருந்து என்ற நிலையை எடுப்பது வரை ,  அந்நிலையை எட்டும் வரை , அந்நிலையை எய்தும் வரை தொடர்ந்து அஜந்தாவுடன் தொடர்பில் இருப்போம்

இந்த அதி அற்புதத்தை தங்களுக்குள் கருக்கொண்டு,  நமக்குத் தந்த முகமறியா என் முன்னோர்களுக்கும் … அக்கருவை தங்கள் கலை நுணுக்கத்தில் ஏற்றி இப்படி ஒரு பேரழகை படைத்த சிற்பிகளுக்கும் ,ஓவியர்களுக்கும்,  ஜாதக கதைகளை வர்ணக் கடலாக வடித்து தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பிக்ஷூக்களுக்கும்தங்கள் செல்வத்தை எல்லாம் இப்பணிக்காக இதயபூர்வமாக செலவிட்ட வியாபாரபெருமக்களுக்கும்  உபயதாரர்களுக்கும் , இதை தங்கள் ஆட்சிக்காலத்தில் செய்து வரலாற்றில் நிலை பெற்ற மன்னர் பரம்பரைக்கும்மந்திரி பிரதானிகளுக்கும்செல்வந்தர்களுக்கும்..… தான் செய்து கொண்டிருக்கும் மாபெரும் செயலின் தன்மை பற்றி எந்த பிரகக்ஞையும் இல்லாமல் பிறக்கும் போது அதற்கு அளிக்கப்பட்ட கட்டளைகளை  மட்டும் செய்து மடியும் கரையான்கள் போன்று , இக்குகைகளில் வாழ்ந்து வேலைகள் செய்து  மடிந்த எத்தனையோ மனிதர்களுக்கும் நன்றிகள் சொல்ல ….

v அஜந்தாவின் எத்தனை கோடிக்கணக்கான உளிச் சத்தம் கேட்டதோ  அத்தனை நன்றிகள்.…

 

v எத்தனை கோடிக்கணக்கான  வண்ணத் தீட்டல்களுக்காக தூரிகைகள்  வண்ண குவைக்குள் மூழ்கி எழுந்ததோ அத்தனை வணக்கங்கள்.

 அஜந்தாவை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று உணர்த்திய “அயராத ஆசிரியர்” ஜெயக்குமாருக்கும்,  வாழ்க்கையையே இப்படி வாழ வேண்டும் என்று இடைவிடாமல் தன் இலக்கியப்பணி  மூலம் ஒரு புதிய ஆன்மீக வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் ஆசான் ஜெயமோகனுக்கும்இப் பிரபஞ்சத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை என் வம்சம் நன்றிகள் சொல்லும்.vajrapani

பேரன்புடனும் நன்றிகளுடனும்

செல்வகுமார்

முந்தைய கட்டுரைகண்ணனை அறிதல், கடிதம்
அடுத்த கட்டுரைதிருமுறை வகுப்பு, கடிதம்