கசப்புகளை எதிர்கொள்வது பற்றி…

 

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் முழுமை அறிவு காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நமது கண்முன் வந்து கொண்டே இருக்கும் எதிர்நிலைகளையும் கசப்புகளையும் காணும்போது நாம் என்ன செய்கிறோம், எப்படி செயல்பட வேண்டும் என்ற ஒரு கையறு நிலை நம் அனைவருக்குமே உருவாகிறது. அதை என்ன செய்வதென்று எவராலும் சொல்ல முடியாது ,

ஆனால் நமது சூழலில் பெருஞ்செயல்களை செய்த அனைவருமே அத்தகைய எதிர்மறை உணர்வுகளை வென்று முன் சென்றவர்கள்தான். அந்த எதிர்மறை உணர்வுகளை அவர்கள் எதிர்கொள்ளவில்லை, தாண்டிச் செல்கிறார்கள் ,அல்லது அவற்றை உள்வாங்கி முன்னே செல்கிறார்கள். புத்தர் வரலாற்றிலேயே அப்படி சாரி புத்தன் போன்ற கடுமையான எதிரிகளை அவர் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தார் என்று வருகிறது. அங்கு ஆரம்பித்து காந்தி வரைக்கும் எல்லா மாமனிதர்களுக்கும் இந்த சிக்கல்கள் உள்ளன.

சிறியவர்களாகிய நாம் செய்யும் செயல்களுக்கு இந்த எதிர்ப்பு உள்ளது. அதை கடந்து எப்படி செல்வது என்பது உங்களைப் போல ஓயாது செயலாற்றி அந்த செயலை வெற்றிகரமாக நிறுத்திக் காட்டும் ஒரு வரலாற்று மனிதர் சொல்லும்போதுதான் இளைய தலைமுறைக்கு அது பின்பற்றத்தக்க பாடமாக அமையும்

எம்.ஆர்.தசரதன்

முந்தைய கட்டுரைஅமெரிக்கவிழா, கடிதம்