வாழும்தமிழ் நிகழ்ச்சியும் பங்கேற்பாளர்களும்.

Screenshot

அன்புள்ள ஜெயமோகன்,

வாழும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சியின் நிகழ்வுப் பட்டியலை பார்த்துக் கொண்டிருந்தேன். உலக இலக்கியம் ஆசிய இலக்கியம் ஆகியவற்றின்மீது பொதுவாகவே ஆர்வம் கொண்ட அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். வெகுஜனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களை அழைத்து இதை நிகழ்த்தி இருந்தால் அவர்கள் தங்களுடைய படைப்புகளை முன்னிறுத்தவும் தங்களை முன்னிறுத்தவும் மட்டுமே முயல்வார்களே ஒழிய நம்மை எந்த வகைளையும் கவனிக்க மாட்டார்கள். அமெரிக்காவின் இலக்கியச் சூழல் என்பது ஒரு வகையில் வணிகமயமாக்கப்பட்டது. ஒவ்வொருவரும் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தங்கள் புத்தகங்களை முன்வைக்க மட்டுமே. எவரும் எதையும் கவனிக்க மாட்டார்கல். பிறர் என்ன பேசினார் என்பது எவருமே கவனிப்பதில்லை. நிகழ்ச்சியில் ஒரு நிமிடம் கூட ஒரு உக்காந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் உள்ள அத்தனை பேருமே தேர்வு செய்து அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேருமே பிற இலக்கியங்கள் மேலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். தொடர்ச்சியாக வெவ்வேறு இலக்கிய களங்களைப் பற்றி எழுதிவருபவர்கள். நம்மை கவனப்படுத்தவும் நம்மை கொண்டு சென்று சேர்க்கவும் நமக்கு உதவக் கூடியவர்கள். இந்த வகையான ஒரு முயற்சியில் இருக்கும் கவனமும் அதை அதற்கு எடுத்துக் கொண்டிருக்கும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அரவிந்த்குமார்

முந்தைய கட்டுரைகசப்புகளை எதிர்கொள்வது பற்றி…