மத அடிப்படைவாதம், கடிதம்

அன்புள்ள ஜெ,

Youtube-ல் நீங்கள் வெளியிட்டு வரும் Unifiedwisdom காணொளிகள் ஓவ்வொன்றையும் பார்த்து வருகிறேன். அவைகள் பல திறப்புகளை அளிக்கிறது.  இந்த மண்ணில் எத்தனை விதமான கல்வி செல்வங்கள் உள்ளன, நான் எதை நோக்கி என் கற்றலை கூர்கொள்ள வேண்டும் என்பதை படிப்படியாக விளக்குகிறது. காணொளிகளின் தரம் செரிவான உரையை மேலும் மேம்படுத்துகிறது.

அண்மையில் வெளிவந்த, “மத அடிப்படைவாதியா மதச்சார்பாளரா?” என்ற காணொளியில்,  மிக எளிமையான சொற்களில் நான்கு வகையாக பிரித்துள்ளீர்கள்.

நான் இந்த சமூகத்தில் ஒரு மத சார்பாளராக இருக்கிறேன் என்று வரையறுக்க உதவியது

மத அடிப்படைவாதிகளையும், மத பழமைவாதிகளையும் எதிர்கொள்ள பெரும் உதவியாக இருக்கிறது.  மதத்தை கடந்து இருப்போருடன் உரையாட விழைகிறது.

எந்த வித சஞ்சலமும் இல்லாமல், எனது கற்றலை எதை நோக்கி கூர்படுத்த வேண்டும் என்பதை விளக்கியது.

நன்றி ஜெ.

ஜானகிராமன்.

முந்தைய கட்டுரைஜெர்மானிய தத்துவம்- கடிதம்
அடுத்த கட்டுரைமதத்தில் இருந்து தத்துவத்தைப் பிரிக்க முடியுமா?