வேதாந்தம் ஒரு கடிதம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

எங்கள் குடும்பம் நீண்ட நாட்களாகவே வேதாந்தத்துடனும் மயிலை ராமகிருஷ்ண மடத்துடனும் தொடர்புகொண்டுள்ள ஒன்று. எங்கள் வேதாந்த பின்புலம் அதைவிடவும் ஆழமானது. ஆனால் எனக்கு இன்றையவேதாந்தம் பற்றி நிறையவே சந்தேகங்கள் இருந்தன. இன்று வேதாந்தம் ஒரு பராமார்த்திக உண்மை என்பதற்கு அப்பால் இன்றைய வாழ்க்கைக்கு என்னவகையான பயனை அளிக்கமுடியும் என்ற குழப்பம் இருந்துகொண்டிருந்தது. வேதாந்தத்தை பயிலலாம், ஆனால் வாழ்க்கைக்கு பயன்படாது என்பதே என் எண்ணமாக இருந்தது. உங்களுடைய சுருக்கமான காணொளி எனக்கு ஒரு பெரிய தெளிவை அளித்தது. இன்றைய கொந்தளிப்பான சூழலில் ஒரு பிரபஞ்ச சத்தியத்தைப் பற்றிக்கொண்டு வாழவும், வாழ்க்கையை அதன் அடிப்படையில் மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டதாக ஆக்கவும் வேதாந்தத்தின் பிரம்மதத்துவம் எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை உங்கள் உரை வழியாக அறிந்தேன். நன்றி, மகிழ்ச்சி.

கே.வைதீஸ்வரன்

முந்தைய கட்டுரைகுழம்பிய இந்துவுக்கு ஒரு கடிதம்