எக்பர்ட் சச்சிதானந்தம், கடிதம்

ஜெயமோகன்

நலமா? தங்கள் எழுத்துக்கள் ஒலி வடிவத்தில் கேட்க முடிகிறது. நன்றி. வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் வேறு என்றாலும் என்னைப் போன்றவர்களுக்கு ஒளி அலைகளே மனத்தைத் தொடுகிறது. நன்றி.என் பெயர் எக்பர்ட் சச்சிதானந்தம், காஞ்சிபுரம்

 எக்பர்ட் சச்சிதானந்தம்

அன்புள்ள எக்பர்ட் சச்சிதானந்தம்,

நாம் 1995ல் நான் காஞ்சிபுரம் வந்திருந்தபோது சந்தித்தோம். நான் உங்கள் இல்லத்திற்கு காஞ்சிபுரம் நாராயணனுடன் வந்திருந்தேன். அன்று கணையாழி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தீர்கள். நான் எழுதிய பழைய இதழ்களில் இப்போது உங்கள் கதைகளைக் காண்பதுண்டு. கிறிஸ்தவ உலகம் பற்றி மிகையில்லாமல் எழுதப்பட்ட நல்ல கதைகள் அவை. 

நீண்டநாட்களாகிவிட்டன. பணி ஓய்வு பெற்றிருப்பீர்கள். அப்போதே பார்வைக்குறைபாடு தொடங்கியிருந்தது. இப்போது எப்படி இருக்கிறீர்கள்? இப்போது ஏதாவது எழுதுகிறீர்களா? எழுதுவீர்கள் என நினைக்கிறேன். உங்கள் கடிதம் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. பல முகங்களை உடனிழுத்து வருகிறது

ஜெ 

முந்தைய கட்டுரைவாசகரல்லாதோரின் வருகை
அடுத்த கட்டுரைஎத்தனை இலக்கிய நிகழ்வுகள்?