வைணவ இலக்கியம், கடிதம்

அன்புள்ள ஜே,

ஆசிரியர் ஜா. ராஜகோபாலன் ஐயா ஜூன் 28-30 நடத்திய வைணவ வகுப்பில் கலந்துக்கொண்டேன். அவர்  பாடலை வாசிப்பதற்க்கு முன்பாக அடிப்படையை விரிவாக விளக்கி எங்களை தயார்ப்படுத்தி அழைத்து சென்றவிதம் எந்த வித சிரமமும் இல்லாமல் புரிந்துக்கொள்ள உதவியது அதில் ஆர்வம் அதிகமாகி நாட்கள் நகர்ந்ததே தெரியாமல் மிகவும் சுவராசியமாக சென்றது.

 மனதில் நின்ற சில்வற்றை பகிர்ந்துக்கொள்கிறேன்.

தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் திருமாளின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன, சங்க நூல்களில் திருமாள் வழிபாடு உள்ளது என்றும் அதிலிருந்து பக்தி இயக்கம் உருவாகி அது வைணவம் என்ற பெயரால் அடையாளப்படுத்தபட்டது என்றும் அதை நாதமுனிகள் நம்மாழ்வார் மூலம் 4000 திவ்ய பிரபந்தமாக தொகுத்தார் என்றும் எங்கள் வகுப்பு தொடங்கியது.

அதில் பக்தி இயக்கம் மூலமாக எந்த தெய்வத்தையும் வழிபடாலாம். பக்தி இயக்கம் ஒரு கடவுளைளோடு ஒரு தரிசனத்தோடு நிற்கவில்லை. பிற தெய்வத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை என்று பக்தி இயக்கத்தின் அடிபடைகள் செயல்பாட்டு முறைகள் என்னவென்று விளக்கினார்

வறையருக்க முடியாதது தான் பிரம்மம். இந்திய மரபுபடி பிரம்மம் என்றால் என்ன என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்தும் தத்துவத்தில் நுழைந்து தத்துவம் என்றால் கேள்விகளால் ஆனது என்றும் எல்லாவற்றையும் விரித்து விரித்து பொருள்க்கொள்ள முயற்சி செய்துக்கொண்டேயிருப்பது ஒரு முடிவில்லாது என்றும் ஒரு இடத்தில் இந்த சிந்தனையை நிறுத்தி அங்கிருந்து துவங்குவது தான் சித்தாந்தம் சித்ததின்+அந்தம் என்றும் அடிப்படை விளக்கங்களை ஆசிரியர் விவரித்தார். ராமானுஜர் இயற்றியவிசிஷ்டாத்வைதம்தத்துவம் சார்ந்தது அதிலிருந்து வந்த சித்தாந்தம் தான்வைணவம்என்று குறிப்பிட்டார்.

பக்தி எப்படி உறுவாகிவருகிறது. பக்தியின் வரலாற்றுக்குறிப்புகள். பக்தி இயக்கத்தின் செயல்பாடுகள். அது இறைவனை எப்படி அணுகிறது. பக்தி இயக்கத்தில் இருக்குக்கூடிய பக்தர்கள் எப்படி இறைவனை அணுகினார்கள். பக்தி இலக்கியங்கியளை அடிப்படையாக் கொண்டது. அது இறைவனை எப்படி அணுகுகிறது. அதை வாசிக்கும் பக்தர்கள் எப்படி இருக்கிறார்கள். வெவ்வேறு உணர்வுகளை எப்படி பாடலில் பார்க்கலாம்.இறைவனை எந்த உணர்வுகளுக்கும் ஆட்படுத்தி அவரை வணங்கலாம், ஆழ்வார்கள் அவர்கள் உணர்வுகளை பாடலின் மூலம் எப்படி வெளிப்படுத்தினாரகள் என்று ஆசிரியர் எங்கள் கையைப்பிடித்து அழைத்து சென்றார்.

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் எந்த நிலைகளில் வேண்டுமானலும் பக்தர் தேர்ந்தெடுத்து இறைவனை வணங்கலாம். அனைவருக்கும் ஏற்ற தாழ்வின்றி அருள் புரிய கூடியவன் இறைவன். அனைத்தையும் அறிந்தவன். பிரம்மம், சகுன பிரம்மாக இறங்கிவந்து  நம்மை ஆட்கொள்கிறான் என்ற ஆசிரியரின் விளக்கம் மேலும் தெளிவைக்கொடுத்தது.

அறிமுக வாசகனான நான் உள்வாங்கியதை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். சில தவறுகள் இருக்கலாம், சில புரிதல்கள் கொடுக்கலாம். ஏதுவாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

மழை தூரல்கள் வெயிலுடன் கூடி பொழிந்தது. காற்று சற்று சில்லேன்று வீசியது. பறைவகளின் சத்தம் பலவாறு ஒலித்துக்கொண்டிருந்தது. பிறகு மழை அதிகமாக் பொழிய ஆரம்பித்ததும் பாடத்தை நிறுத்திவிட்டு மழையை பார்க்க தொடங்கிவிட்டோம். சற்று நேரம் கழித்து மீண்டும் வகுப்பு தொடங்கியது.

பன்னிரெண்டு ஆழ்வார்கள்ஒவ்வோரு ஆழ்வார்களின் வரலாறும் பெருமாளை புகழ்ந்தும், புலம்பியும், திட்டியும், ஆண்டாளின் பித்து நிலை, பக்தி நிலை, மழயை, காற்றை, பறவையை தூதுவிடுவோம் ஆனால் திருமங்கை ஆழ்வார் பல்லி குட்டியை தூது விடுகிறார் என்று பல பாடல்களின் வழி விளக்கினார்.

என் சிறுகுட்டன்என்ற தலைப்பிலிருந்து ஆரம்பித்துநப்பின்னை காணில் சிரிக்கும்’, ‘பின்னும் ஆளும் செய்வன்’, ‘ஒன்று அலாத மாயையாய்’,  ‘மூவுருவில் இராமனாய்’, ‘பாதியும் உறங்கிப் போகும்’, ‘கூனல் பிறை வேண்டி’,’ என்னையும் உன்னில் இட்டேன்என்ற தலைப்பிலிருந்து ஓவ்வொரு பாடலின் விளக்கம் கொடுத்தும், எங்களை வாசிக்க வைத்தும், கலந்துரையாடலுடன் வகுப்பு மிக சிறப்பாக சென்றது.

எனக்கு பிடித்த சில பாடலகள்.

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவர்

நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும்

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே’. – பெரியாழ்வார்

இதில்அறிவு அழிந்தனர்என்ற வரிகளின் தத்துவ விளக்கம் நான் என்கிற அகங்காரம் இது என்னுடையது என்ற மமகாரமாக மாறுவதையும் விரிவாக விளக்கினார்

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக் பெற்றான்

பற்றி உரவிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுகொலோ

கற்றன பேசி வசவு உணாதே காலிகள் உய்ய மழை தடுத்து 

கொற்ற குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்’ – ஆண்டாள்

கிருஷ்னனின் லீலைகள் பெண்களை சீண்டுவது. அவர்கள் கட்டும் சிறுவீட்டிஅ கலைப்பது என்பதின் உட்கருத்தாக இங்கு இருக்கும் எந்த பொருளும் உன்னுடையது அல்ல. உயிர் பிரம்மாவோடது. மானுட உடல் அசித்து என்று பிரித்து காட்டுகிறது,

தமிழ் பரிமாண வளர்ச்சிக்கு காரணம் கவிதைகள். தற்போது உள்ள சூழலுக்கும் பொருள்க்கொள்ளக்கூடிய வகையில் இருப்பதனால் தான் காலத்தை தாண்டி அது நிற்கிறது

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்என்று ஆரம்பித்த நம்மாழ்வார் பாடலைக் கேட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் வந்தது என்று ஆசிரியர் கூறவெத்தல போடுவிங்கலாஎன்று ஆசிரியர் கேட்க, இரவு உணவிற்க்கு பிறகு தின்னையில் அமர்ந்து அந்த அனுபவத்தையும் பெற்றேன்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் பிறவிஎன்பது மழை துளியில் எழும் கொடை போல தொடர்ந்து விழுவதும் மீண்டும் எழுவதும் என்ற நம்மாழ்வாரின் வரிகள்

அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்எனற பெரியாழ்வாரின் பாடலில்அஞ்சல் என்று கைகவியாய்’ – கையை காட்டுப் போதும்

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து’  எனற பாடலில் வரும்ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்என்று ஆண்டாலின்உனக்கே நாம் ஆட்செய்வோம்வரிகள் நா இப்படித்தான் நீ எத்தனை பிறவி கொடுத்தாலும் நான் உன்னைச் சேராமல் விடமாட்டேன் என்ற பித்து நிலைஆசிரியர் விளக்கியவிதம் நேரடியாக மனதில் சென்று தொட்டது. பாடல் வரிகளின் நேரடி விளக்கம் ஒன்று அதன் உட்கருத்து இன்னொன்று மண்டையில் சமிட்டியால் அடித்தது போல உறைத்தன. ஆசிரியரின் விளக்க உரை பொருமையாகவும் விரிவாகவும் ஆழமாகவும் திரும்ப திரும்ப வாய்விட்டு வாசிக்க வைத்தது சிறப்பு

காலையில் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு 8 மணிக்கே தயாராகிவிட்டோம். யோக வகுப்பில் அறிமுமானவர் ரவி குமார் காஞ்சியிலிருந்து. அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருந்தார். சசிக்கலா முதல் முறையாக வருவதாக சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சில தெரிந்த முகங்கள், பல புதிய முகங்களின் அறிமுகத்துடன் வகுப்பு கலகலப்பாக இருந்தது.

முலை, மயிறு என்ற வார்த்தைகள் தமிழ் சமூகத்தில் கொச்சையாக பேசப்படுகிறது. இன்றும் கேரளாவில்முலையிடுஎன்று தாய்பால் கொடுப்பதை வழக்கமாக உள்ளனர்

பாடலை பரவலாக தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளதால் அடிப்படை அறிமுகம் அவசியமானது. முக்கியமாக தொடக்க நிலை இலக்கிய வாசகனுக்கு அடிப்படை அறிமுகம் வகுப்பு அவசியம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை

உடலை இயக்குவது உயிர். உயிர் சித்து அது அழிவற்றது காலத்திற்க்கு அப்பாற்ப்பட்டது  உடல் அசித்து இது அழியக்கூடியது காலத்திற்க்கு உட்பட்டது என்றும் சரணாகதியே வழி வேறு வழி இல்லை என்பது வைணவத்தின் அடிப்படைக்கொள்கை என்றும் ஆழ்வார்கள் உணர்ந்த பல உண்ர்வு நிலைகளை வெளிப்படுத்தி இயற்றியப் பாடல்கள் மூலமாக அவர்கள் காலத்திற்க்கு அப்பால் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆசிரியர் விளக்கினார்.

யாருக்கெல்லாம் சொல்லிக்குடுக்கலாம் என்று ராமானுஜரிடம் கேட்டதிற்க்கு அவர் கூறியதுஆசையுடையவர்க்கெல்லாம் கூறுமின்என்று கூறினார் என்று சொல்லி சிறப்பாக வகுப்பை நிறைவு செய்தார் ஆசிரியர்.

வாரத்தில் இரண்டு மணி நேர வாசிப்பு இருந்தால் பாடலை மேலும் புரிந்துக்கொள்ள உதவும் என்று ஆசிரியரின் அறிவுரை.

கல்வியுடன் மணி அண்ணாவின் அரவணைப்பு, தேநீர், வேலைக்கு உணவு என்று ஒரு குறுகுல கல்வியின் முழு அனுபவத்தையும் நாங்கள் பெற நீங்கள் உருவாக்கிக்கொடுத்த வாய்ப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்.

சர்வா

முந்தைய கட்டுரை‘யமுனை துறைவனிடத்தில் சரணாகதி’ – பிரபந்த வகுப்பு
அடுத்த கட்டுரையோகத்தின் இன்றைய தேவை