ஒரு நேர்வகுப்பை முன்வைக்க முயலும்போதுதான் காணொளி வகுப்பு என்னும் கருத்து எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்று தெரிகிறது. மிகப்பெரிய வணிகப்பிரச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது அது. அதை நம்மால் எளிதில் எதிர்கொள்ள முடியாது. அது கோடிக்கணக்கான ரூபாய் ஈட்டும் பெருவணிகம். பெருவாரியாக மக்கள் அதை ஏற்பதற்கும் காரணம் உண்டு. அது உழைக்காமல், சிரமப்படாமல் அடையும் கல்வி என்னும் மாயையை அளிக்கிறது.
General காணொளி வழியாகக் கற்கமுடியுமா?