அறை, கடிதம்

ஆசிரியருக்கு,

நான் ஒரு எழுத்தாளர் அல்ல, ஆனால் என்னை நானே கண்டு கொண்ட மாதிரி ஒரு உணர்வு, இந்த காணொளியை என்னுடைய மேஜையில் இருந்து பார்த்த போதுஏற்பட்டது..காலை,பொழுது  பற்றிய தங்களது விளக்கம் உண்மை.நமது தேசம் கொடுத்த பரிசுகளில் அதுவும் ஒன்று.சிந்தனைசுயம், எதிர்வினைபிறர் எண்ணத்திற்கு வசப்படுதல்.அருமையான உளவியல் பாடம்.

சிறிது நேரத்திற்கு முன்புதான் என்னுடைய தமிழாசிரியர்..கா.பெருமாள் அவர்களிடம் பேசினேன்.எந்த எழுத்தாளர்களின் கருத்தின் மீது ஐயப்பாடு வந்தாலும் அவரிடம் கேட்பேன்.

சுந்தர ராமசுவாமியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.நவீன இலக்கியங்களை அறிமுக படுத்தியவர்.தினசரி படிக்கும் எனக்கு தூக்கம் தான் மருந்து.

அகத்தில் உள்ளது புறத்தில்,புறத்தில் உள்ளதே அகத்தில் என்ற வேதங்களின் கோட்பாடு எழுத்தாக மலரும் போது எந்த புறத்தூண்டுதலும் தேவையில்லை ஒரு நல்ல எழுத்தாளனுக்கு.பாரதியின் எழுத்தும் தெய்வம்,எழுதுகோலும் தெய்வம் என்ற நினைவு வந்தது.உள்ளத்தை உள்ளபடி வைத்திருந்தால் அழகுணர்ச்சி தானே வரும். காந்தி புற உலக்குக்காக  தன்னைத்தானே வருத்திக்கொண்டவர் என்று ஓஷோ கூறுவார்.ஒரு படைப்பாளிக்கு அழகுணர்ச்சி (Aesthetic sense)மிக அவசியம்.

தங்கள் காணொளி, என் போன்ற வாசகர்களை மட்டுமல்ல, எழுத்தாளர்களையும் சிந்திக்க வைக்கும்.சிந்தனைகள் சுயமாகும் போது அதுவே உண்மைப்படைப்பு.எதிர்வினைகள் ஆற்றினால் சுயமற்று மீண்டும் பாழாகிப்போகும் மனது.எழுத்தாளர்களின் அறைதன் சுயத்தை அறிந்த ஒரு மனிதனின் பதிவாக இருந்தது.

தா.சிதம்பரம்.

முந்தைய கட்டுரைகூட்டங்களை தவிர்த்தல்
அடுத்த கட்டுரைபெருங்கருணையின் அழைப்பு