மதம் தேவையா?

அன்புள்ள ஜெ

மதம் என்னும் அமைப்பைப் பற்றித்தான் இந்தியாவில் இன்று மிக அதிகமாகப்பேசுகிறார்கள். ஆனால் மிகமிகக்குறைவாகவே மதம் பற்றிய புரிதல் உள்ளது. மதம் பற்றி பொதுவெளியில் என்ன நிலைபாடு எடுப்பது என்பதுதான் இங்கே அனைவருக்கும் பிரச்சினை. ஆனால் மதம் சார்ந்து எந்த தெளிவும் இல்லை. ஆகவே இடத்திற்கு ஏற்ப முகங்கள் மாறுபடுகின்றன. பொதுவெளியில், நண்பர்களுடன் இருக்கையில் நாத்திகம் பேசுபவர்கள் நாம். வீட்டில் ஆத்திகர்கள். இப்படிப் பல குழப்பங்கள். ஏன் என்றால் நாம் மதத்தைப் பற்றி புறவயமாக யோசிப்பதே இல்லை.

எந்த விதமான ஆழ்ந்த சிந்தனையும் நுணுக்கமான ‘கிளாஸிபிகேஷன்’ வழியாகவே நிகழ முடியும். இனம்பிரிப்பதுதான் சிந்தனை என்பது. அப்படி மதத்தின் மீதான அணுகுமுறைகளை ஆழமாக பிரித்து மூன்று தரப்புகளாக ஆக்கிக்கொண்டு ஒவ்வொன்றிலுமுள்ள நிறைகுறைகளையும் இழப்புகளையும் பேசும் அழகான காணொளி நீங்கள் அண்மையில் வெளியிட்டது. நன்றி

ராஜசேகர்

 

முந்தைய கட்டுரைகலையின் அருவுருவம்
அடுத்த கட்டுரைஎது அறிவியல்? ஏன் அறிவியல்?