அறிவதிகாரம்- கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு.

டெல்லி;  அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அறிவதிகாரம் கொண்ட ஒரு இடம்.அதை வெல்ல அறிவுதான் தேவை என்பதை தெளிவாக கூறியது என் போன்ற உண்மை வாசகனுக்கு பெருமையாக உள்ளது.குணாத்தியரை பற்றி அவருடைய வாழ்வை பற்றிய செய்தி  தற்போதைய தலைமுறை அறிய வேண்டியது.அறிவதிகாரம் என்றும் இருக்கும் அரசியல் அதிகாரம் இருக்கும் வரை.அறிவதிகாரத்தை வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.பாரதியின் ரெளத்திரம் பயில் என்ற குரலாக இருந்தது தங்கள் காணொளி.முயலாத எதுவும் இயலாது. அறிவதிகாரத்தை வெல்வது சாத்தியமே.உங்கள் போன்ற எழுத்தாளர்காளின்  தூண்டுதலால்.நன்றி.தொடரட்டும் உங்கள் முயற்சி.
தா.சிதம்பரம்.
முந்தைய கட்டுரைதியான விடுதலை- செல்வகுமார்