ஆசிரியருக்கு,
நான் எதிர்பார்த்த வகுப்புகள் அனைத்து ஒரே வேளையில் திரண்டு வருவதுபோல இருக்கிறது.
கிருத்தவ மெய்யியல் /மேற்கத்திய தத்துவம்/ ஆயுர்வேத/ கர்நாடக இசை வகுப்பு நீண்ட நாட்களாக வருவதற்கு முயலும் வகுப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிற்கிறது.
சில வகுப்புகள் மீண்டும் தொடருமா என்ற ஐயமும் இருக்கிறது.குறிப்பாக மேலே சொன்ன அனைத்து வகுப்புகளும்.
கருநாடக இசையும் உங்கள் மேடையுரைப்பயிற்சியும் பக்கத்தில் வந்தாலும் ஒரு வாரம் விடுப்பு எடுத்து வரலாமா அல்லது WFH கேட்டு வரலாமா… என்று நினைக்கின்றேன்.
ஆனால் ஒன்று சொல்லலாம்… சிறிய வயதில் என் தந்தை யாருக்கும் தெரியாமல் ஒரு 5 நாணயம் தருவார். நான் எப்போதும் போகும் இனிப்பு கடைக்கு சென்று குளோப் ஜாமுன் கேட்பேன் அவர் அந்த ஜாடியில் இருந்து ஒரு உருண்டை மட்டும் எடுத்துப்போட்டு ஜீரா ஊற்றி தருவார்… நான் சாப்பிடும்போது இரண்டு எண்ணங்கள் வரும். சரி இந்த ஜாமுனை ரசித்து திண்ணுவோம் என்று கிளம்பும்போது அந்த ஜாடியை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு வருவேன்.
என் திட்டம் மாதத்தில் ஒரு வகுப்பு ஆனால் இப்படி அனைத்தும் ஒன்றாக வந்தால் என்ன செய்வது என்றும் அதுவும் மீண்டும் தொடருமா என்ற வகுப்புகள் மிகப்பெரும் குழப்பத்தையே உண்டு பண்ணுகின்றன…
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
திருமலை
அன்புள்ள திருமலை,
வகுப்புகள் அமைக்கையில் ஒரு வகையான பன்முகத்தன்மை இருக்கும்படி அமைக்கவேண்டும் என்பதில் உறுதியாகவே உள்ளேன். ஆனாலும் இப்படி ஆகிவிடுகிறது. பொதுவாக எல்லா வகுப்புகளையும் தொடர்ச்சியாக நடத்தவேண்டும் என்னும் எண்ணமே உள்ளது. ஆனால் மிகமிகக்குறைவாக, எங்களுக்கு பொருளியல் இழப்பு உருவாகும்படி, பங்கேற்பு உள்ள நிகழ்வுகள் உடனே திரும்ப நடைபெறாது. நீண்ட இடைவெளி உருவாகலாம்.
ஜெ