தனிமை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

காலையில் இந்த காணொளியோடு இன்றைய பொழுது அற்புதமாக விடிந்தது. நிறைய என் மனதிற்குள் உழன்று கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.பிறந்த இடத்திலும் புகுந்த இடத்திலும் என்னை சுற்றி அத்தனை நபர்கள் இருக்கும் பொழுது அவர்கள் பேசி சிரித்துக்கொண்டு மகிழ்வாக காலம் கடத்தும் பொழுது நாம் ஏன் அப்படி இல்லை என கேள்வி எழுந்து உறுத்திக்கொண்டே இருக்கும்.

எப்பொழுது இந்த புற விசயங்களை முடித்துக்கொண்டு எனது சிறிய அறைக்கு வந்து எதாவது ஒரு புத்தகத்தையோ எதாவது படித்தவற்றையோ நிகழ்வையோ சிந்திக்க தோன்றும்.இதனால் அறைக்குள் சென்று அடிக்கடி முடங்கிக்கொள்கிறாள்.அறையில் எதோ ஒன்று செய்கிறாள் எனசிறுவயதில் கண்காணிப்பிற்கு உட்பட்டது உண்டு இறுதியில் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது.எதாவது படிப்பேன் இல்லை தூங்குவேன்.இது எனக்கே குழப்பமாக இருந்தது.

நன்றாக உடுத்திக்கொள்கிறேன்.நன்றாக அனைவரோடும் பேசுகிறேன்.ஆனால் ஏன் மனம் அடிக்கடி தனிமையை நாடுகிறது என புரியவே இல்லை.ஆயிரம் நபர்கள் சுற்றியிருந்தாலும் அத்தனைப்பேருக்கு நடுவே நான் தனிமையில் தான் இருப்பேன்.தனிமை உணர்வு ஏன் ஏற்படுகிறது என குழப்பமாக இருந்தது.முகநூலுக்கு வருவேன் இரண்டு நாட்கள் இருப்பேன்.திரும்பி வந்துவிடுவேன்.

இதனால் நானே போய் இந்ததனிமையை கலைத்துக்கொள்ளுவதாக நினைத்து பிறரோடு பேசுகையில் அவமானங்களும் வெறுப்பும் புறக்கணிப்புகளும் தான் நிகழும் இதனால் இன்னும் மனம் குழம்பும்இந்தக்காணொலி மிகச்சிறந்த ஒரு தீர்வு.தனிமை என்பது ஏகாந்தம் .அது தேன்துளி அற்புதம் நல்லதொரு காணொளி .. வாழ்த்துக்கள் 

என்றும் அன்புள்ள 

தேவி லிங்கம் 

முந்தைய கட்டுரைஒரு முதற்காலடி