ஆசிரியருக்கு.
எப்போதும் போல சொல்ல வந்த கருத்தை நன்றாக தங்கள் காணொளியில் வாசகர்களின் மனதில் இணைப்பை ஏற்படுத்தி புரிய வைக்கிறீர்கள்.You are an expert in conneting your thoughts with your readers .இது ஒரு நவீன நாவலாசிரியருக்கு மிக அவசியம்.Consciousness பற்றியும் அதன் மூலமாக கலையை எவ்வாறு ரசிப்பது என்பது பற்றிய விளக்கம் அருமை.தன்னுணர்வு, மனிதர்களிடம் குறைந்து வருவதற்கு காரணம் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழல் .இயற்கையின் கொடையை ரசிக்க மனிதனுக்கு தன்னுணர்வு அவசியம்.உலகமெல்லாம் சுற்றி வந்த ஒருவன் தன் வீட்டின் முன் புற்களின் மீதுள்ள பனித்துளியை பார்க்க ரசிக்க மறந்து விடுகின்றான் என இரவீந்திர நாத் தாகூரின் கவிதை ஒன்று உண்டு.இறுகிப்போன மனம் இயற்கையை ரசிக்க முடியாது. ஓவியம்,இலக்கியம்,இசை, நடனம் என பலகலைகளும் நமக்கு இயற்கையின் வளத்தை அழகை எடுத்து கூறும் போது தன்னுணர்வு வெளிப்படுவது இயல்பு.அந்த தன்னுணர்வை தக்க வைத்து கொள்வதில்தான் கலையுணர்வு ஏற்படுகிறது.கலைகள் மூலமாக தன்னுணர்வை ஒருவன் சில மணித்துளிகளாவது மீட்டி எடுக்க முடியும் என்றால் அவனும் ஒரு கலாரசிகனே.அதை மீட்டி எடுக்க உதவும் முழுமையறிவு வகுப்புகள் வாசகர்களிடையே தன்னுணர்வை மீட்டி இயற்கையை உணர வைக்கும் என்பதில் ஐயமில்லை.
தா.சிதம்பரம்.