அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தமிழிசை இயக்கத்தை பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்தேன் .ஏற்கனவே தமிழ் இயக்கம் பற்றியும் ஒரு அற்புதமான காணொளி வெளியாகியிருந்தது.
இந்த காணொளிகள் வழியாக தமிழில் எவ்வளவு பெரிய அறிவு இயக்கம் நடந்திருக்கிறது என்ற சித்திரத்தை அடைகிறேன். ஆனால் அந்த அறிவியக்கத்தின் முகம் ஏன் முற்றிலும் அழிந்துவிட்டது? வெறுமை பழம் பெருமை பேசுவதாகவும் எந்த அறிவு முறைமையும் இல்லாமல் கண்டபடி தற்பெருமை சொல்லிக் கொள்வதாகவும் ஒரு ‘அறிவு கெட்ட’ இயக்கமாக தமிழ் இயக்கம் இன்றைக்கு ஏன் மாறி இருக்கிறது?
இன்று தமிழியம் என்பது கீழ்த்தர இனஅரசியலாக மாறி உள்ளது .தமிழக அரசியலிலே இன்றைக்கு மிகவும் அறிவு குறைவானவர்கள் இந்த தமிழ் இயக்கத்தின் தொடர்ச்சியாக தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருப்பவர்கள்தான். இந்த வீழ்ச்சியை உங்களுடைய காணொளிகளை பார்க்கும் போது திரும்பத் திரும்ப உணர்கிறேன் .அது பெரிய சோர்வை உருவாக்க கூடியதாக உள்ளது.
எம்.ராஜேந்திரன்











