யோகம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களைப்பற்றி எனக்கு மிக எதிர்மறையான சித்திரம் இருந்தது. உங்களைப் பற்றிய வசைகளை நான் பார்ப்பதுண்டு. அந்த வசைகளை நம்பியதுமுண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வசைகளில் பெரும்பாலானவை பொய்யான காரணங்கள் கொண்டவை என்பதும், அந்த வசைகளைச் சொல்பவர்கள் மிகச்சாதாரணமான மனிதர்கள் என்பதும் தெரியவந்தது. அப்போது யோசித்தேன், இந்த அளவுக்கு வசைகளை வாங்கிக்கொண்டு ஒருவர் எப்படி நேர்நிலையாக சிந்தித்து நாற்பதாண்டுக்காலமாக தொடர்ச்சியாகச் செயல்படுகிறார் என்று. உலகமெங்கும் பல்லாயிரம் பேரை நேர்நிலையாகப் பாதிக்கவும் பல தளங்களில் செயல்படச்செய்யவும் உங்களால் முடிகிறது. அது உங்கள் ஆன்மிக ஆற்றலுக்கான சான்று. உங்கள் நேர்மைமேல் உங்களுக்கிருக்கும் ஆழமான நம்பிக்கையையும் அது காட்டுகிறது. வணக்கம்

ஜோசப் மரியசாமி

அன்புள்ள மரியசாமி

நஞ்சை அமுதாக்கும் கலைக்குப் பெயர் யோகம்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழியக்கம், ஒரு கடிதம்