வெறுப்பு, கடிதம்

ஆசிரியருக்கு,

மீண்டும் ஒரு  கடினமான பேசுபொருளை எடுத்து உரையாடினீர்கள். வெறுப்புணர்ச்சி,தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை பற்றி அருமையாக விளக்கினீர்கள்.இவை எல்லாம் அலைகடல் போல அலைகள் வந்த வண்ணம் இருக்கும்.உண்மையாக வாழ்பவன் அலையின் திசையை அறிந்து அலையின் திசையை தனக்கு சாதகமாக பாய்மரக் கப்பலை திருப்பி துடுப்பு போட்டு தான் அடைய நினைத்த கரையை சென்றடைய வேண்டும்.English poet William Shakespeare said, “There is a tide in the affairs of everyone, if you take it lightly, you will land in trouble. If you take it seriously you will land in  the shore” .என்பார்.புத்தர், காந்தி,ஏசு, போன்றவர்களுக்கு, மனித எதிர்மனச்சிந்தனைகள்  கடல் போல இருந்தது.அவர்கள் தங்கள் ஆத்மபலத்தால் கரை சேர்ந்தார்கள்.நாம் கரையில் உட்கார்ந்து கொண்டு உலகை பார்த்துக்கொண்டு, கடல் அலைகளை பார்த்து கொண்டு இருக்கிறோம்.கரையில் உட்கார்ந்து கொண்டு நீச்சல் பயில ஆசைப்படுபவன் ஒருக்காலும் நீச்சல் பயில முடியாது. இதைத்தான் திருக்குறளும் பிறவிப்பெருங்கடல் என்கிறது.மீண்டும் மீண்டும் எந்தப்பணியையும் விமர்சனங்கள் செய்பவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். அதே இடத்தில் நின்று கொண்டிருப்பார்கள்.

அவர்களிடம் நாம் எதிர் மனப்பான்மையையும் வெறுப்பையும் தான் கண்டு கொள்ள முடியும்.நம்முடைய சேவைக்கு இந்த எதிர்அலை எதிர் நீச்சலுக்கு தேவை.

கண்ணதாசன்,”உலகம் ஆயிரம் சொல்லட்டுமே,உனக்கு நீதான் நீதிபதி.மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பாத்துக்கோ நல்லபடிஎன்று

ஒரு  திரைப்பட பாடலை எழுதியிருப்பார்.செயலிழந்த  மனிதர்கள், செயல் புரிபவர்களை பார்த்து பொறாமை,வெகுளி,படத்தான் செய்வார்கள்.நாம் நம்முடைய மனதை இவற்றில் பறி கொடுத்து விடாமல் பாது காத்து கொண்டுஎன் கடன் பணி செய்து கிடப்பது அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராம்பரமே.”என்ற தயுமானவர் அருள் வாக்கு படி செயலாற்ற வேண்டும்.போற்றலும், தூற்றலும்  ஒரே நாணயத்தின்இரு பக்கங்கள் . அதை கண்டுபிடித்து நம்முடைய தேவைக்கு பயன் படுத்துதல் அறிவுடமை.எங்கு, எப்போது எதை நீக்க வேண்டுமோ அங்கு அப்போது எதிர்ப்பை நீக்கி முன் செல்ல நீங்கள் கூறிய கருத்துக்களை முன்மொழிகின்றேன்.

தொடரட்டும் தங்கள் மனித மேம்பாட்டு முயற்சி.

தா.சிதம்பரம்

முந்தைய கட்டுரைகட்டணத்தை திரும்பப்பெறுதல்