சங்கரரும் சம்பவரும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

குரு பூர்ணிமா நெருங்கும் இவ் வேளையில்  எனது எல்லா ஆசிரியர்களையும் நினைவு கூறுகிறேன். முதன் முதலில் ஒரு ஆசிரியரின் காலில் மானசிகமாக பணிவது என்பது எனக்கு History Geography வகுப்பு எடுத்த தட்சிணாமூர்த்தி சார். வேப்பங்காயாய் கசந்த ஜாக்ராபி வகுப்பை சுவாரசியமாக மாற்றி, என்னுடைய பயணங்களுக்கு வித்திட்டவர் இவரே. எங்கள் ஊரில் குழந்தைகளுக்கு எழுத்தறிவுத்தலின் போது சரஸ்வதி தேவியையும், ஆதி சங்கரரையும் வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பார்கள்ஆனால் யாருக்கும் அவரின் சாதனைகளோ உபதேசங்களோ ஒன்றும் தெரியாது

20 வருடங்களுக்கு முன்பு சிக்கிம் மடாலத்தில்  பத்ம சம்பவரின் சித்திரத்தை பார்த்ததுமே, காலில் விழத் தோன்றியதுஅவரின்  மதமோ சாதனைகளோ அறிவுரைகளை ஒன்றுமே தெரியாது.

ஆனாலும் இந்த இரு ஆசிரியர்களின் காலடியை தொடர்வது என்று முடிவு செய்தேன். இவர்கள் சென்ற இடமெல்லாம் நான் சென்று பார்க்க  விரும்புகிறேன்.

இருவரும் சமகாலத்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் இவர்களுக்குள்  சந்திப்பு /உரையாடல்களோ நடந்தனவாசங்கரரின் மறைவும் பத்ம சம்பவர் தோற்றமும் இன்றும் சரியாக விளக்கப்படவில்லைஇவர்கள் இருவரை பற்றியும் ஏதேனும் புனைவு கதைகள் உள்ளதா? ( ஹாலிவுட் என்றால் இருவரும் ஒருவரே என்று சினிமாக்கள/ கதைகள் வந்திருக்கும். ) 

உங்களுக்கு இவர்களைப் பற்றிய புனைவு எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா அல்லது இவர்களின் வாழ்க்கையை ( not teachings) புனைவில் கொண்டு வருவது blasphemy என்று கருதுகிறீர்களா?

அன்புடன்,

மீனாட்சி 

 

அன்புள்ள மீனாட்சி, 

உண்மையிலேயே சங்கரர்பத்மசம்பவர் இருவரையும் இணைத்து ஒரு நாவலை எழுதும் கனவு எனக்கு உண்டு. அதன்பொருட்டு நிறைய பயணங்களையும் செய்துள்ளேன். திபெத்திய வஜ்ராயனம் பற்றிய என் அறிதல்மேல் எனக்கு நம்பிக்கை வராததனால் ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன். நுணுக்கமாக என்னை பின் தொடர்வதற்கு நன்றி.

ஜெ

முந்தைய கட்டுரைகுழந்தைகளின் அகம், கடிதம்