குழந்தைகளின் அகம், கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு.
நம் குழந்தைகளின் அகவுலகம் கட்டுரை வாசித்தேன்
நம் குழந்தைகளின் அகவுலகை தீர்மானிப்பது ஆசிரியர்களோ.கல்வி நிறுவனங்களோ அல்ல.மாறாக பெற்றோர்கள்.தனியார் கல்வி நிறுவனங்களில் பணத்தை கட்டிக்கொண்டு என் குழந்தைக்கு தேவையான கல்வியை கொடு என்பதுதான் இன்று நடக்கிறது. இடையில் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி சம்பந்தமான மென் பொருட்களை உருவாக்கி அதை கல்வி முதலாளிகளிடம் சந்தைப்படுத்தி வருகிறது.பெற்றோர்கள் தங்கள் வாங்கும் திறனை (Purchasing power) பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வியை வாங்கி கொள்கிறார்கள்.இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.இது எல்லா அரசுக்கும் தெரிகிறது. ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.அரசு கல்வி நிறுவனங்கள் தனியார்கல்வி  நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பார்த்து மாடல் பள்ளிகளை உருவாக்கி வருகிறார்கள். தொழில் நுட்பங்கள் கல்வியில் சரியான நேரத்தில் புகுத்தப்படவில்லை.அதனால் Digital Divide தனியார் பள்ளி அரசு  பள்ளி  மாணவர்களிடையே சமூகப்பிளவு ஏற்பட்டுவிட்டது.இந்த பிளவை சரி செய்ய வேண்டியது நிர்ப்பந்தம். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள்  பெற்றோர்களும் மாணவர்களும்தான்.ஆசியர்கள் பாடு திரிசங்கு சொர்க்கம்.நல்ல கல்விக்கு அதிக  பணம் தேவை என்பது நாட்டு நடப்பாகி விட்டது. அரசு இன்னும் வேகமாக முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் .கற்றோர் கல்லாதவர் பிரிவு  என்பது பணத்தால் தீர்மானிக்கப்படுவதால் உண்மையான கல்வியின் சமத்துவம் மறைந்து விட்டது. சமத்துவம், சம உரிமை முதலில் கல்வியில்தான் பிறகுதான் மற்றவை அனைத்தும்.
புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கை.
தா.சிதம்பரம்.
முந்தைய கட்டுரைவிபாசனாவில் மலர்தல்