அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து வந்தேன். கட்டுரைகளை வாசிக்கும் போது என்னுடைய பிரச்சினை அதை தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை என்பதுதான் .கட்டுரைகளை என்னால் தொகுத்துக் கொள்ள முடியவில்லை. கட்டுரைகள் என் நினைவில் நிற்கின்றன. ஒட்டுமொத்தமாக நீங்கள் சொல்ல வருவது என்ன என்று எனக்கு தெரியும் .அதை நான் உரையாடலில் கூறுவதும் உண்டு. ஆனால் இந்த காணொளிகள் வந்த பின்னர் என்னுடைய புரிதல் இன்னும் மேம்பட்டு இருக்கிறது.
நீங்கள் நேரடியாக என்னிடமே பேசுவது போன்ற ஓர் உணர்வு உருவாகிறது. ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களை நீங்கள் எனக்காக செலவழிப்பது போல தோன்றுகிறது. நான் தினமும் தியானம் செய்யக்கூடியவன். தியானம் முடிந்த பிறகு 20 நிமிடங்கள் உங்கள் உரைகளை கேட்கிறேன். பெரும்பாலான உரைகளில் நீங்கள் ஒரு அமைதியான குரலில் என்னை நோக்கி பேசுகிறீர்கள். என்னுடைய மனதை நோக்கி உங்கள் சொற்கள் வந்து சேர்கின்றன.
பழைய காலங்களில் குருவிடமிருந்து நேரடியாக கற்பது தான் சிறந்த கல்வி என்று சொல்லப்பட்டது. இன்றைக்கு அத்தகைய கல்வி இல்லை. இந்த இணையம் அளிக்கும் வாய்ப்பு அத்தகைய ஒரு கல்வியை நமக்கு அளிக்கிறது. இந்த காணொளிகளில் உங்கள் குரலை உங்கள் முகத்தையும் கேட்டும் பார்த்தும் பழகிய பிறகு உங்கள் கட்டுரைகளைப் படிக்கும்போது அந்த கட்டுரைகளில் இருந்தும் நீங்கள் நேரடியாக என்னிடம் பேசுவது போன்ற உணர்வு உருவாகிறது. அந்த கட்டுரைகள் இன்னும் எனக்கு தெளிவாக புரிகிறது போல் உள்ளன .இப்போதுதான் பழைய கட்டுரைகளை எல்லாம் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கட்டுரை எல்லாம் என்னிடம் நேரில் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த அனுபவம் எனக்கு மிக மன நிறைவை அளிக்கிறது
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நான் உங்களை என் மாண என்னுடைய ஆசிரியராகவே கருதினேன்
செல்வன் கதிர்