அன்புள்ள ஜெ,
உங்களுடைய காணொளி வழியாக தான் உங்களுடைய இணையதளத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடைய தத்துவ வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நான் வெள்ளிமலையில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அந்த இடம் அந்த கல்விச்சூழல் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. அங்கே வரும் நண்பர்களின் பொதுவான மனநிலை கற்பதற்கும் உரையாடுவதற்கு உரியதாக இருக்கிறது.
அத்துடன் அங்கு பெரும்பாலானவர்கள் இளைஞராக இருப்பதும் ஒரு முக்கியமான விடுதலையாக இருக்கிறது. எனக்கு யோகம் தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டு. ஆனால் அந்த வகையான வகுப்புகளுக்கு செல்லும் போதெல்லாம் அங்கே முதியவர்களை சந்திக்கிறே. அவர்களெல்லாம் பெரும்பாலும் ஏதேனும் உடல்நிலை சிக்கலினால் தான் அங்கு வருகிறார்கள் .அந்த உடல்நிலை சிக்கலையை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக உடல் நிலையை பற்றி பேசுபவர்கள் எனக்கு மேலும் உடல்நிலை குறைவுகளை உருவாக்குகிறார்கள். உற்சாகமான ஆர்வமான நண்பர்களுடன்தான் நான் பழக விரும்புகிறேன்.
ஆகவே எந்த யோக பயிற்சிக்கு செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். உங்களுடைய பயிற்சி முறைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் மனநிறைவையும் அளித்தன. தொடர்ச்சியாக அவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன் .எனக்கு கவர்னர் சிதறல் பிரச்சினை உள்ளது .அந்த பிரச்சினையை சரி செய்த பிறகு தத்துவம் உட்பட பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். அந்த வாய்ப்பு அமையட்டும் ,நன்றி
எஸ்