இந்து ஞானம் ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ

உங்கள் சிறிய நூல் இந்து ஞானம் வாசித்தேன். அதிலுள்ள உதிரிக்கட்டுரைகளை வாசித்திருந்தாலும் நூலாக வாசிப்பது ஆழமான அனுபவமாக அமைந்தது. எல்லா கட்டுரைகளும் சிறியவை. சுருக்கமானவை மட்டுமல்ல செறிவானவை. தர்க்கபூர்வமானவை. ஆனால் எளிய நடை கொண்டவை. ஆழமாக வாசிக்கும் வழக்கம் இதுவரை உருவாகாத எனக்கு மிக அவசியமானவை இவை. ஆனால் இவை ஏன் இந்து ஞானம் அடிப்படைக்கேள்விகள் என தலைப்பிடப்பட்டுள்ளன? இந்து மதம் என்று சொல்லியிருந்தால் அதிகம்பேர் வாசிப்பார்களே?

ஆர். கண்ணபிரான்

 

அன்புள்ள கண்ணபிரான்,

எப்படி தலைப்பிட்டிருந்தாலும் தமிழகத்தில் மிகக்குறைவானவர்களே வாசிப்பார்கள்.

இந்து ஞானம் என்பதே இந்நூலின் உள்ளடக்கம். இந்து மதத்தில் ஆசாரம், நம்பிக்கைகள், கலை ஆகிய பல விஷயங்கள் உள்ளன. நான் அவற்றை இதில் விவாதிக்கவில்லை. இந்நூலில் இந்து தெய்வங்கள் பற்றியோ வழிபாட்டுமுறை பற்றியோ இல்லை. அவற்றை எதிர்பார்த்து எவரும் வாசிக்கக்கூடாது அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைஇணையமும் இயற்கையும்