நம் கதாபாத்திரங்கள்

திரு.ஜெயமோகன் எழுத்தாளர் அவர்களுக்கு.

All the world is a stage, we are all actors, every one has his entrance and exit-Shakespeare.
இந்த ஆங்கில வசனம் ஞாபகம் வந்தது.நீங்கள் கூறுவதுபோல நாம் நம் வாழ்க்கையில் நம்  கதாபாத்திரங்களை எதோ குத்தகைக்கு எடுத்தது போல (Stereo type)ஒரே வேஷத்தை போட்டுக்கொண்டு பிறரை போர் அடிக்கச்செய்கிறோம்.சில நேரங்களில் நாம் வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது நமது அன்றாட மனச் சிக்கல்களிலிருந்து விடுபட உதவும்.உதாரணமாக திரைப்படம் காணும் போது சில கதாபாத்திரங்களில் நம்மை ஐக்கியப்படுத்தி கொள்வது. நல்ல நாவல்களில் வரும் கதாபாத்திரங்களில் நம்மை ஊடுருவச்செய்தல் போன்றவை நமக்கு ஒரு விடுதலை தரும்.கோர்ட் கோபியாக கடைசிவரை வாழ்ந்துவிட்டு செல்வது ஒரு விடுதலை அல்ல.மைமிங் செய்வது யாதார்த்தம் ஆகிவிட்டது. சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் நம்முடைய உண்மையான. வெறுக்கப்படும் கதாபத்திரம் மாறுவதற்குகூடவாய்ப்பு உண்டு.
காணொளி ஆரம்பத்தில் அரபிக்கடலுக்கும் வங்காள விரிகுடாக்கும் தாங்கள் கூறிய வித்தியாசம் ஒரு  கல்வி.நாம் பள்ளி  பூகோளத்தில் கற்காதது.இது போன்ற Explorer மனப்பான்மை வேண்டும்.வாழும் காலத்தில் நாம்  தசாவதாரம் எடுத்தால் நமக்கு மோட்சம் கிட்டும் என்பதுவும் சாத்தியம்.
தா.சிதம்பரம்.
தோவாளை.
முந்தைய கட்டுரைஅத்வைதம் வேர்விடுதல்..