இன்று நம் வாழ்க்கையில் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல தொழில் அளவிலேயேகூட பலவகையான வடிவமைப்புப் பயிற்சிகள் தேவையாகின்றன. குறிப்பாக யூடியூப் முகப்புகள், இணையதள போஸ்டர்கள், இன்ஸ்டா போஸ்டர்கள் என பலவகையான வடிவமைப்புகளை நாம் செய்தாகவேண்டியுள்ளது. ஓரளவு ஓவிய அறிமுகம், காட்சிக் கலை அறிமுகம் அதற்குப் பெருமளவில் உதவும். குறிப்பாக மாணவர்களுக்கு அது வாழ்க்கை முழுக்க உதவும் ஓர் அடிப்படைப் பயிற்சி. செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் எவர் சுயமாக அதைச் செய்கிறாரோ அவர் மட்டுமே கவனம் ஈர்க்கமுடியும் என்பதே இன்றைய நிலைமை.
அதன்பொருட்டு மாணவர்களுக்கான ஓர் ஓவியம்– வடிவமைப்புப் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைக்கிறோம். ஓவியர் லலிதா ராகவன் கோட்டோவியம் வரைதல், நீர்வண்ண ஓவியம் வரைதல் சார்ந்த அடிப்படைப் பயிற்சியை அளிப்பார். கீதா செந்தில்குமார் விளம்பரப் பக்க வடிவமைப்பு, கதைச் சட்டக வடிவமைப்பு, நூலட்டை வடிவமைப்பு, இன்ஸ்டாபோஸ்டுக்கான பக்க வடிவமைப்பு முதலிய நவீன வடிவமைப்புப் பயிற்சியை அளிப்பார். மூன்றுநாட்கள் தங்கி பயில்வது இத்துறையில் ஓர் ஆரம்ப அறிமுகத்தை அளிக்கும்.
ஓவிய ஆர்வமுள்ளவர்கள், ஓவியத்திறன் உடையவர்கள் மட்டுமன்றி பிறரும் கலந்துகொள்ளலாம். வரைய முடியாதவர்கள்கூட பக்க வடிவமைப்பு, டிஜிட்டல் பக்க வடிவமைப்பு பற்றிய பயிற்சியை அடையலாம்.
இவ்வகுப்புக்குப்பின் இந்த ஆசிரியர்களுடன் நேரடியான தொடர் பயிற்சியையும் பெறலாம்
நாள் மே 8, 9 10
தொடர்புக்கு [email protected]

குரு நித்யா இலக்கிய அரங்கம்
1993 முதல் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் குரு நித்யா இலக்கிய அரங்கம் இந்த ஆண்டும் நிகழும். பல ஆண்டுகளாக இது ஊட்டி குரு நித்யா குருகுலத்தில் நிகழ்ந்து வந்தது. அதன்பின் ஏற்காடு முதலிய ஊர்களிலும் நிகழ்ந்தது. இலக்கியப்படைப்பாளிகளுடனான சந்திப்புகள், இலக்கிய உரையாடல்கள் என இலக்கியத்தை மட்டுமே மூன்றுநாட்கள் கொண்டாடும் ஒரு நிகழ்வு இது.
நாள் மே 22 23 மற்றும் 24
தொடர்புக்கு [email protected]
(தாவர அறிமுகம், பறவை பார்த்தல் நிகழ்வுகளுக்கான இடங்கள் நிறைவடைந்தன)












