அரசியலின்மை, அரசியல் கடத்தல்…

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் .நீங்கள் முகநூலில் தொடர்ச்சியான அரசியல் காணொளிகளை போட்ட போது ஒரு வகையான கசப்பு எனக்கு உருவாகியது. அந்த காணொளிகளுக்கு அந்த அளவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமா என்றெல்லாம் யோசித்தேன் .ஏனென்றால் அரசியலைத் தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலை ஆதரித்து  பேசுவது மட்டும் அல்ல எதிர்ப்பதும் கூட இன்றைக்கு எந்த ம்திப்பும் இல்லை. 

அரசியலில் எல்லா கோணத்தையும் எல்லாரும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தமிழ் சேனல்களில் அரசியல் பேசுகிறார்கள். இத்தனை பேசினால் அதன் பிறகு அதில் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. என்ன பேசினாலும் ஏற்கனவே பெசியவற்றுக்குத் தொடர்ச்சியாகவோ திருப்பிச் சொல்வதாகவோதான் அமையும். ஆகவேதான் நான் எந்த வகையான அரசியலில் எப்போதுமே கவனிப்பதில்லை .அரசியலை எப்போதும் ஐந்து நாட்கள் கழித்துக் கவனிப்போம் என்பதுதான் என்  கொள்கை. ஐந்து நாட்களுக்கு பிறகு பார்த்தாலும் ஏதேனும் மதிப்பிருந்தால் மட்டும் தான் அதற்கு முக்கியத்துவம் என்று தோன்றுகிறது.

அர்சியலுக்கு அப்பால் சில விஷயங்களை சொல்லும் காணொளிகளைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீங்களும் அதை பேசுவது பெரிய மனச்சோர்வை உருவாக்கியது. ஆனால் தொடர்ந்து காணொளிகளை பார்த்த போது நீங்கள் அதை ஒரு சின்ன இடையீடாக்வும் ஒரு கவன ஈர்ப்பாவும்  செய்தீர்களே ஒழிய அதை தொடர்ந்து செய்யவில்லை என்பதை  கவனித்தேன். அது மிகச் சிறந்த விஷயம் என்று தோன்றியது.

இந்த காணொளிகள் அனைத்தும் அரசியலுக்கு அப்பால் இருக்க வேண்டும் என்றும், மெய்யியல், தத்துவம் இலக்கியம் கலை ற்றி மட்டுமே அவை பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காணொளிகள் மீண்டும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராகவேந்திரன்

முந்தைய கட்டுரைபிடிவாதம்.