பிடிவாதம்.

 

அன்புள்ள ஜெயமோகன்,

சில சமயம் காணொளிகளை நீங்கள் சொல்லும் விஷயங்களை விட அதற்கு சொல்லும் முன் உதாரணங்களில் அல்லது தொடக்கங்களில் வேறொரு வகையான தரிசனம் எங்களுக்கு கிடைக்கிறது.

ஒரு காணொளியில் நீங்கள் அந்த காணொளியை ஐந்தாவது முறையாக பதிவு செய்கிறதாகச் ன்னீர்கள். அது முதல் ஐந்து முறையும் தவறாக பதிவு செய்யப்பட்டதால் மீண்டும் மீண்டும் அதை பதிவு செய்கிறீர்கள். நான் இதை பதிவு செய்வதாக முடிவு எடுத்துவிட்டேன், ஆகவே எண்ணில் இதை பதிவு செய்யாமல் விடமாட்டேன், அது என்னுடைய இயல்பு என்று சொல்கிறீர்கள். இந்த இயல்பு தான் இன்று பெரும்பாலான இளைஞரிடம் இல்லாமல் இருக்கிறது. ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை பிடிவாதமாக செய்து முடிப்பதும் அதன் பொருட்டு முழு வாழ்க்கையை அர்ப்பணிப்பதும்தான் உங்களுடைய வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியதாக நான் எண்ணிக் கொள்கிறேன்.

ஆர்.சிவபாலன்

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவம் நான்காம் நிலை.