தாவரம், பறவைகள், ஓவியம்

அன்புள்ள ஜெ

குழந்தைகளுக்கான வகுப்புகள் முடிந்து விட்டன என்று நினைக்கிறேன். பறவை பார்த்தல், தாவரங்களைப் பார்த்தல் ஆகிய இரண்டு வகுப்புகளும் மிக முக்கியமானவை. ஓவியக் கல்வி என்பது இன்றைக்கு வெவ்வேறு பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது. நேரடியாக பிள்ளைகளை இயற்கையுடன் ஈடுபடுத்தும் இரு பயிற்சிகளும் அவர்களை இன்றைய மூளை சார்ந்த சோம்பலிலிருந்து விடுவித்து தீவிரமாக இயற்கையுடன்  இணைய வைக்கும் என்று நினைக்கிறேன்.

‘அவர்களுக்கு இன்று தேவை இயற்கையை அறிவது. புதிய ஒன்றை அறிவது என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுதான் அது. விளையாட்டு வழியாக கல்வி, செயல்முறையான கல்வி என்று இதைத்தான் சொல்கிறார்கள். அதை இந்றைய சூழலில் நகரத்தைச் சார்ந்த மிகப்பெரிய பள்ளிகளில் கூட செய்ய முடியாது என்பது தான் உண்மை. கிராமங்களில் அதைப் பற்றிய யோசிக்கவே வேண்டியதில்லை.

இந்த வகுப்புகள் ஒருவகையான மாற்று கல்வி என்று தோன்றுகிறது. வழக்கமான கல்வியில் எது குறைகிறதோ அதை இதில் ஈடு கட்டுகிறோம்.

மணி அர்விந்த்

அன்புள்ள மணி ,

உண்மையில் ஓவியமும் நமது கல்லூரிகளிலோ பள்ளிகளில் முறையாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அங்கே ஓவியம் கற்றுக் கொடுப்பதற்கான ஓவியர்கள் ஆசிரியர்களாக இருப்பதில்லை. அதிகபட்சம்  ஓவியத்தின் அடிப்படைகளை மட்டுமே தெரிந்து கொண்ட லர் இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த கல்வி பிள்ளைகளை ஈர்ப்பதுமில்லை.

இந்த வகுப்பில் ஒரு நிபுணர் ஓவியத்தின் ஏராளமான சிறிய தொழில்நுட்பங்களை சொல்லிக்கொடுத்தார். அடிப்படை இலக்கணம் கற்பித்தார். அதை கற்றதுமே ஓவியம் எளிதாக ஆகிவிட்டது.

இந்த வகுப்பில் பங்கேற்ற அனைவருமே தெரிந்து கொண்ட ஒன்று ஏறத்தாழ அனைவருமே ஓரளவுக்குப் படங்களை வரைய முடியும் என்றும் அது ஒரு கவனத்தைக் குவுக்கும் மகத்தான தியான அனுபவமாக ஆக முடியும் என்பதும்தான்.

ஆகவே இதை அனைவருக்கும் உரிய வகுக்கு. குழ்ந்தைகளுக்கு உரிய வகுப்பு. வருங்காலத்திலாவது குழந்தைகள் நிறைய இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசமூகவலைத்தளங்களின் வசைகள்.