
குருபூர்ணிமா உரை நிகழ்த்துவதைப்பற்றி லண்டன் நண்பர்கள் அரவிந்த், தீபா மற்றும் முத்து ஆகியோர் முடிவெடுத்தனர். நான் அப்போது வியன்னாவில் தத்துவ முகாம் நடத்திக்கொண்டிருந்தேன். அங்கிருந்து ரோம். இரண்டாவது முறையாக ரோம் நகரைப் பார்க்கிறேன். இம்முறை கொதிக்கும் வெயிலில். 29 காலையில் ரோமில் இருந்து விமானம் ஏறி லண்டன் வந்துசேர்ந்தேன். தீபாவின் இல்லத்தில் மாலை ஆறரை மணிக்கு அந்த உரை.
இதே நாளில் வெள்ளிமலையில் குருபூர்ணிமா நிகழ்வு நண்பர்கள் கிருஷ்ணன், கடலூர் சீனு ஆகியோர் ஏற்பாட்டில் , அந்தியூர் மணி ஒருங்கிணைப்பில் குரு சௌந்தர் தலைமையில் நேரடிக்கொண்டாட்டமாக நடந்தது.









