தத்துவம் என்றாலே பயனற்றது என்னும் எண்ணம் நம்மில் பலருக்கு என்றும் உண்டு. ஆனால் வாழ்க்கையில் அன்றாடத்தை மீறிய ஓர் இக்கட்டு வரும்போது மிகச்சாமானியர்கள்கூட தத்துவத்தையே பற்றிக்கொள்கிறார்கள். தத்துவம் பேசுகிறார்கள். அவர்கள் அறிந்த அந்த தத்துவம் மதத்தில் இருந்து தன்னியல்பாக அவர்களுக்கு வந்ததாக இருக்கும். அதையே முறையாக, முழுமையாக கற்பவர் அடையும் விடுதலை என்பது அசாதாரணமான ஒன்று
General தத்துவத்தால் என்ன பயன்?