அன்புள்ள ஜெ,
நீங்கள் நடத்தும் பயிற்சி முகாம்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. ஒரு பயிற்சி முகாம் முடிந்தால் பல மாதங்கள் கழித்தே அது மீண்டும் நிகழ்வதுபோல் உள்ளது. ஒரே சமயம் இரண்டு பயிற்சி முகாம்களை நடத்துவதே இதற்கான தீர்வாக இருக்கமுடியும்.பயிற்சி முகாம்களை வேறு இடங்களில் நிகழ்த்தலாம். அல்லது ஒரே இடத்திலேயே இரண்டு முகாம்களை நடத்தலாம். இதைப்பற்றி யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஜெய்குமார் அர்விந்த்
அன்புள்ள ஜெய்க்குமார்
உண்மையில் இந்தப்பிரச்சினை உருவாகிவிட்டது. சில வகுப்புகள் ஆண்டுக்கு நான்கு மட்டுமே நிகழமுடியும் என்னும் நிலை. தத்துவ வகுப்புகளை அப்படி நடத்த முடியாது. ஆண்டுக்கு ஆறு வகுப்புகளேனும் நிகழ்ந்தால்தான் அந்தப்பாடத்திட்டம் முடிவுற முடியும். இதற்கு என்ன வழி என சிந்தனைசெய்துகொண்டிருக்கிறோம். மிகச்சிறிய அளவிலேயே இதையெல்லாம் யோசித்தோம். இவை இவ்வளவு பெரியதாக ஆகிவிடுமென்னும் எண்ணம் அப்போது இருக்கவில்லை.
ஜெயமோகன்