உள்ளுணர்வு என்பது என்ன?
ஆசிரியருக்கு.
அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ,ஒரு நேர்முகத்தில் ஒரு டியூனை ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் செய்ய முடியாது.அதற்கு கற்பனையும்,உள்ளுணர்வும் தேவை என்றார்.உண்மை.நீங்கள் உள்ளுணர்வு பற்றி கூறியது முற்றிலும் உண்மை.நான்கடந்த முப்பது ஆண்டுகளாக சர்வேதேச பள்ளிகளில் முதல்வராக பணியாற்றி தெரிந்து கொண்டதுவும் இதுதான் ,கற்பனை மற்றும் உள்ளுணர்வை வளர்ப்பதற்கு தியானம் வழிவகை செய்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் மாலைநேர வகுப்பில் குழந்தைகளுக்கான தியான வகுப்புகளை ஆரம்பித்தேன்.சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது.அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏற்பட்டது.காரணம் அவர்கள் அதை ஒரு மத சம்பந்தமான நிகழ்வாகவே கருதினார்கள். நான் இந்த பள்ளியில் தினமும் காலை வழிபாட்டு நிகழ்ச்சியில் (School Morning prayer) ஒரு சமஸ்கிருஸ்த ஸ்லோகத்தை சொல்லி அதற்கு விளக்கமும் ஆங்கிலத்தில் கூறுவேன்.அதற்கும் பின்விளைவுகள் ஏற்பட்டன.
பள்ளி நிர்வாகம் எனக்கு பல வழிகளில் ஊக்கம் கொடுத்தாலும் ஆசிரியர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு இல்லை.காரணம் அவர்களுக்கு தர்க்கரீதியான பாடத்திட்டம் முக்கியம்.தற்போது ஓய்வில் இருக்கும்போது சென்னை சமஸ்கிருத கல்லூரியில் , பல்வேறு அறக்கட்டளைகள் தமிழில் வேதங்களின் வகுப்புகளை(Endowmment lectures) மிகச்சிறந்த சமஸ்கிருத பண்டிதர்கள் நடத்தும் வகுப்புகளை காணொளியில் பார்க்கிறேன்.தற்போதைய கல்வியில் ,அரசியலால் நாம் எவ்வளவு விழுமியங்களை இழந்திருக்கிறோம் என்பதை என் போன்ற ஆசிரியர்களால் உணர முடிகிறது.
உங்கள் மெய்யுணர்வு பற்றிய முன்னெடுப்பு மற்றும் காணொளி மூலமாக அதன் வகுப்புகளை கண்டு வருகிறேன்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாசகன்.
தா.சிதம்பரம்.
தோவாளை.
9442451366.