நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன் நடைமுறை. நிரந்தரமான பதற்றமே அவர்களைச் செலுத்திய விசை. நாம் அன்றாடத்தில் சலிப்புற்றிருக்கிறோம். அதை உதற விரும்புகிறோம். அதன்பொருட்டே சில்லறைக் கேளிக்கைகளிலும், வம்புகளிலும் திளைக்கிறோம். அது நம்மை இணைய அடிமைகளாக ஆக்குகிறது. வளர்ந்த நாடுகள் பொருளியல் விடுதலையை முன்னரே அடைந்தவை. அவை எப்படி இச்சவாலைச் சந்திக்கின்றன?
General அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்