அந்தகரணவிருத்தி, கடிதம்

ஆசிரியருக்கு.

அந்தகரணவிருத்தி என்ற தத்துவக்கோட்பாட்டை  மிக எளிதாக கையாண்டிருக்கிறீர்கள்.ஒரு சிறந்த கதாசிரியர் உவமானத்திலிருந்து உவமேயத்திற்கு எடுத்துச்செல்வது போல  அன்றாடத்திலிருந்து உயரபறத்துலுக்கு எடுத்து செல்வது ஒரு கலை.அதை இலகுவாக ஆனால் கவனமாக செய்து இருக்கிறீர்கள். காளிதாசனும்,கபிலரும்,கம்பனும் செய்ததை சுட்டி காண்பித்தது நிஜம்.மெய்மறத்தல் தான் ஆன்மீகம். சில நொடிதான் ஆனால் மனிதன் தன்னை உணர இயற்கையை ரசித்தால் போதும். காண கண்கோடி வேண்டும் என்பார்கள் ,இயற்கை கொடுத்த ஒரு ஜோடி கண்கள் போதும்,உள்ளம் பெருங்கோவில்தான்.எல்லா உயிரும் இயற்கையை ரசிக்கின்றன என்பதை டாபர்மேன்,குரங்குகள் உதாரணத்தை காண்பித்தது  இலக்கியபார்வை .தெய்வாம்சத்தை தொட வெகு தூரமில்லை.மனம்தான்.

தொடர்ந்து இயற்கையை ரசிப்போம்.கொண்டாடுவோம்.மனிதம் தழைக்கட்டும்.

அன்பன்.

தா.சிதம்பரம்.

தோவாளை.

முந்தைய கட்டுரைவாழ்வைக்கொண்டாடுதல்
அடுத்த கட்டுரைபெருங்கனவின் ஒட்டுண்ணிகள்- கடிதம்