பெருங்கனவின் ஒட்டுண்ணிகள்- கடிதம்

பெரு மதிப்பிற்குரிய ஜெ,

இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களைப்போலஞானத்தின் அடையாளமான தாமரை மலருக்கும் பல ஒட்டுண்ணிகள் உள்ளனஅவை தாமரையை உள்ளும் புறமும் உறிஞ்சி வாழ்வதோடு சேர்ந்தே மடியும்.

உங்களுடன் பயணிக்க பகிர்ந்துகொள்ள பெற்றுக்கொள்ள அறிவை ஞானத்தை திரட்டிக்கொள்ள எத்தனிக்கும் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு என் சக நண்பர்கள் அளித்துள்ள கௌரவம் நாங்கள்ஜெஎன்ற ஆலமரத்தின் அல்லது தாமரையின் ஒட்டுண்ணிகள்உங்களை அண்டி வாழும் பொருட்டு சுற்றத்தாரிடம் பெயரும் புகழும் அதை வைத்து எதிர்காலத்தில் பெரும்பொருளும் ஈட்ட நினைக்கும் வெள்ளை காளான்கள்உங்களை வாசிப்பதையும் பின் தொடர்வதையும் எங்களின் முகவரியாக மாற்றிக்கொள்ளவும் உங்கள் ஒளியின் வெளிச்சம் மட்டுமே எங்களை உலகத்திற்கு முன்னிறுத்த உதவும் ஒரே கருவி , அதன் பொருட்டு இலக்கியம் என்ற பெயரில் நடமாடும் சந்தர்ப்பவாதிகள்இவை என் நெருங்கிய நெடுநாள் நண்பர் கூறியது. எதற்குப் பிறகே உங்கள் ஞானத்தின் வெளி வட்டம் எவ்வளவு பெரிது என விளங்கியதுஇத்தனைக்கும் எனக்கு நெடுநாளைக்கு முன்பிருந்தே அவர் உங்களை நிழல் போல் தொடர்ந்து வாசித்து வருபவர்.நேரத்திற்கு ஏற்ப கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பாசிஸ்ட் சங்கி என் பல பதக்கங்களை வழங்குவார்என் அருகிலிருக்கும் நண்பர்கள்பலர் நீங்கள் அடிக்கடி கூறும் வசைபாடிகள் மற்றும் முகநூல் வம்பர்களின் கூட்டம் என்று தெரியவந்தது ஆனால் எனது வருத்தம் அவர்களுக்கு  பல ஆண்டுகள் கடந்தே நான் உங்களை கண்டடைந்தேன்.. அதனால் அவர்கள் மேல் கோபத்திற்கு பதிலாக பொறாமையே ஏற்பட்டது.. அந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லி ஆம் நாங்கள்பெரும்கனவின் ஒட்டுண்ணிகள்

பெரும்பான்மையினரைப்போல் சிறுவர் மலர் , அம்புலி மாமா , ராஜேஷ் குமார் , கன்னித்தீவு, சுஜாதா, கல்கி மற்றும் விகடனில் தொடங்கிய வாசிப்பு பழக்கம் இடைக்கால பொருளியல் மற்றும் உலகியல் நுகர்வுகளில் சிக்கி திசை தெரியாமல் சென்று கொண்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு நண்பன் அழைப்பின் பேரில் குமாரகுருபரன் விருது விழாவில் உங்களை சந்தித்த பிறகு மீண்டும் ஒரு வாசிப்பு தொடக்கம் கிடைக்கப்பெற்றதுகொற்றவை, யானை டாக்டர், தேவி, கன்யாகுமரி, காடு என முடிந்த வரை வாசிக்க தொடங்கினேன்.. கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கும் நேரம் மற்றும் வீரியத்தை அதிகப்படுத்தினேன்.. எஸ் ரா, அசோகமித்திரன் , சு ரா, குகா, யுவன் என விரிவுபடுத்திக்கொண்டேன்..

அங்கிருந்து வந்து சேர்ந்த இடம் தான் வெள்ளிமலைஆலயக் கலை பயிற்சி முகாம். ஜேகே அவர்கள் முதல் நாளிலேயே மனதை அடியோடு சலவை செய்து உலர்த்திவிட்டார். 11 ஆம் வகுப்பு படிக்கும்போது நண்பன் ரியாஸ் என் மடியிலேயே இறந்துபோக அன்றிலிருந்து மனதில் பக்தி மறைந்து போய் கடமையாக மட்டுமே மாறிப்போனதுஆனால் பக்திக்கு அப்பார்ப்பட்ட கலை மற்றும் மனிதனின் கனவு அந்த இறை மார்க்கத்தின் அடியில் பண்பாட்டு கூறாக அமைந்துள்ளதை அறியமுடிந்ததுசிற்ப , ஆகம மற்றும் வாஸ்து விதிகள் ஒரு புதிய திறப்பை தந்தன.. அதுவரை கோவில்களுக்கு ஒரு மந்தையைப்போல் சென்று திரும்பியதை நினைத்து வெட்கப்பட்டேன்.. சிற்ப நுணுக்கம் மற்றும் பிரம்மாண்ட கட்டமைப்புகளை அதற்கு கொடை அளித்த மன்னனின் பார்வையில் இருந்து பார்ப்பதை விட அதை செய்த கலைஞனின் மனதில் இருந்து காண வேண்டும் என்ற கூற்று ஒரு புதிய திறப்பை தந்தது. சிறிய பயணங்களின் வழியாக அகக்கண்ணால் காண தொடங்கிய பிறகு, வகுப்பில் கலந்து கொண்டு ஆசிரியரின் அருகில் இருந்து கற்றுக்கொள்வதின் முக்கியம் தெளிவுற்றதுஇந்த சீலைப்பேன் வாழ்க்கை எனும் கடலுக்கு நடுவே பெரிய கலங்கரை விளக்கம் போல் ஜேகே அவர்களின் கல்வி மனத்திற்கு நிறைவு தந்தது. முக்கியமாக  அந்த சூழல்  மட்டும் நண்பர்கள் சுற்றம்இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவும்தொடர்ந்து வாசிக்கவும் , புதிய ஆதர்சங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உதவி புரிந்தது

அந்த சுற்றத்தின் பயனால் தொடங்கியது எங்களின் அஜந்தா மற்றும் எல்லோரா பயணம். 1200 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவிருக்கும் தருணத்தை எண்ணி தினமும் களிக்கத் தொடங்கி இருந்தேன் . சென்னையில் தொடங்க இருந்த விமானப் பயணம் இண்டிகோ சேவையின் தரத்தால் 4 மணி நேரம் தாமதமாக, மும்பையில் இருந்து அவுரங்காபாத் செல்லும் விமானத்தை பிடிக்க இயலாமல் போனதுஅப்போது தான் நாங்கள் 13 பேர் ( இரண்டு சிறுவர்கள் உட்பட) இருப்பது தெரிய வர ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி மிகுந்த பொருட்செலவில் காலை 8 மணிக்கு மும்பையிலிருந்து அவுரங்காபாத் சாலை பயணத்தை தொடங்கினோம்அடுத்து நடக்கப்போவது தெரியாமல் இருக்கும் பயணமே மிகுந்த உற்சாகத்தையும் அனுபவத்தையும் அளிக்கும் என உங்களின் பயணக்கட்டுரையில் வாசித்திருக்கிறேன்உண்மைதான் அடுத்த 12 மணிநேரம் உற்சாகம் , சிரிப்பு , மகாராஷ்ட்ராவின் சாலைகள் , காலை போஹா மற்றும் வட பாவ் சிற்றுண்டி என ஒவ்வொன்றும் ஒரு புதிய அனுபவமே.. நாட்டிலேயே அதிக GST வருவாய் , அதிக தனிநபர் வருமானம், பல கார்ப்பரேட்களின் தலைமையகம் கொண்ட மகாராஷ்ட்ராவின் சாலைகளை பார்க்க பரிதாபமாக இருந்தது.. விமான நிலையத்தில் இருந்தே தொடங்கி விட்டது முற்றிலும் குழிகள் மற்றும் புழுதி அப்பிய சாலைகள்.. இடையில் ஒரு 100 கிலோமீட்டர் மட்டும் சிமென்டால் வேயப்பட்ட மும்பை நாக்பூர் அதிவேக சாலை வழி பயணம்ஆனால் 13 பேர் கொண்ட ஒரு இனிய சுற்றம் அமையப்பெற்றது தான் அந்த பயணத்தை இனிமை ஆக்கியது.. ஒருவருக்கொருவர் உதவியாக இருந்ததோடு அடுத்த 12 மணிநேரம் அஜந்தாவை காணப் போகிறோம் என்ற அவதானிப்பே எங்களை கரை சேர்த்தது.. மோசமான விமான பயணம் , குண்டும் குழியுமான சாலை, சுமாரான உணவு, நடுவே உருளிப்பாட்டை பழுது போன்ற எந்த தடைகளும் எங்கள் உற்சாகத்தை குலைக்க இயலவில்லை. ஒருவருக்கொருவர் அறிமுகம், ஆலயக் கலை முகாமில் கற்றுக்கொண்டதை நினைவுகூரல், பாடல், பகடி என போகுமிடம் வெகு தூரமில்லை என்று கரைந்து கொண்டே வந்ததுஅஜந்தவை அடையும்போது இண்டிகோ என்ற குடும்பம் (சந்தோஷ், குமரகுரு, கா சிவா, அப்துல் ரகுமான், மணிகண்டன் , மகேந்திரன், சுதா, யுவராணி, ஹர்ஷன், மணிகண்டன், வீர ராகவன் , நிவேதிதா, மற்றும் நான் ) அமையப்பெற்றது.. அங்கிருந்து பயணம் முடியும்வரை அதே உற்சாகத்தோடும் துணையோடும்  சிரிப்போடும் களிப்போடும் கலையோடும் கனவோடும் ஒவ்வொரு நிமிடத்தையும் பருகினோம்.

முதல் நாள் இரவே மறுநாளின் பயணத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் தெளிவாக கொடுக்கப்பட்டது .. சற்று ஏற்றத்தில் நின்று அந்த மானுடக் கனவின் விரிவை கண்டவுடன் அனைத்து சோர்வுகளும் கலைந்து உவகை பற்றிக்கொண்டது. அஜந்தாவின் ஒவ்வொரு சட்டகத்திலும் கருணை, கருணை , பெருங்கருணை , என ஓவியங்களுடன் ஊடாக காலம் எங்களை கி மு 2 மற்றும் கி பி 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே ஊடுருவி முன்னும் பின்னும் அழைத்து சென்றதுகாணக் கண்கோடி வேண்டும் ஆனால் இங்கு நூறு கோடி கண்களும் கொள்ளாதுகாணும் இடம் அனைத்திலும் நிறைந்து இருந்த அவரின் அதிசியங்கள் அதை கலையில் சமைத்த கலைஞனின் கைவண்ணம் என நீண்டு வீடுபேறு நிலையில் கிடந்ததை கண்டவுடன் மனதை ஒரு நீண்ட அமைதி சூழ்ந்துகொண்டதுஒரு நீண்ட அமைதியுடன் நாங்கள் அனைவரும் அமர அவரும் அந்த மௌனத்தின் எதிரொலியில் எங்களை சன்னமாய் நிறைத்தார்இரண்டு நாள் முழுவதும் ஒரு நீண்ட ஓவிய மரபில் திளைத்துவிட்டு எல்லோரா நோக்கிப் பிறப்பட்டோம்.

அஜந்தாவின் நுண்ணிய மெல்லிய கண்களை அகண்ட விழிகளின் பரவசத்துடன் பார்த்துக்களித்த எங்களுக்கு எல்லோராவின்  அந்த விசாலமான கூர்கொண்ட கவித்துவமான ஒற்றைக்கல்லை திறந்து பார்க்க சற்று நேரம் எடுத்ததுஈசனும் பெருமாளும் பல அவதாரங்கள் எடுக்க, பார்வதியின் மருண்ட முகம் ஒரு பக்கம் மகிஷாசுர மர்த்தினியின் தாண்டவம் மறுபக்கம், எட்டுத் திசை தேவர்களும் துவார பாலகர்களும் காத்து நிற்க, மீனாட்சியை ஒரு கரம் பிடித்து மறுபுறம் அந்தகனை வதம் செய்யவும் , பகடை ஆடவும் , கஜ சம்ஹாரம் செய்யவும் ஆடல் வல்லானுக்கே அருள்புரிந்த அந்த சிற்பக் கலைஞர்களை சிந்தை வியந்து நினைவு கூர்ந்தோம்அருகே பார்சுவநாதர் பாகுபலி துணை நிற்க மதங்கரும் சித்தாயிக்காவும் வளமை உரைக்க அமைதியே உருவாக மகாவீரர் வீற்றிருந்தார்.

கடைசி நாளில் நேரமின்மைக்கு இடையிலும் ஜேகே உட்பட அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஒவ்வொரு குகையாக பார்த்துவிட்டு ஒரே மூச்சில் அந்த கைலாஸநாதரின் விஸ்தீரனத்தை மலை மேலேறி கண்டு கழித்துவிட்டு தான் கீழிறங்கினர்இத்தனைக்கும் அன்று முழு நாளும் கொய்யாபழம்முறுக்குகடலை மிட்டாய் , தண்ணீர் மற்றும் காற்றைக் குடித்து தான் கடந்து கொண்டிருந்தோம்.

உங்கள் பெயரை அனுதினமும் சொல்லி என் மனைவியுடம் வசை வாங்கி கொடுப்பது என் பழக்கம்இப்போது அந்த வரிசையில் ஜேகே யும் இணைந்து கொண்டார்(மன்னிக்கவும்). நவீன்தேஜஸ்பிராஸ்பர் , கார்த்திக்ராம்குமார் , பொன் மகாலிங்கம் ஆகியோருக்கு மனம் கனிந்த நன்றிகள்.

தமிழகத்தின் எதிர்கால கலை இலக்கியம் என்ற கைலாய மலையை அந்த சிவனே  ஒரு விரல் கொண்டு அழுத்தினாலும் நீங்கள் நிலை நாட்டியிருக்கும் இந்த பெருஞ்செயல் அதை வேரூன்றி ஆலமரம் போல கிளை பெறச்செய்யும் என்று அந்த40 இணை கண்களும் (முழுதும் எங்களுடன் பயணம் செய்த அந்த ஒரு ஜோடி கண்கள் உட்படஆமாம் உங்களுக்கும் சேர்த்தே நுழைவுக்கட்டணம் உணவு இருக்கை என அனைத்திலும் நீங்கள் எங்களுடன் பயணம் செய்தீர்கள் )

கடைசியாக ஒன்றுதான்

நன்றி ஆசானே!!

இப்படிக்கு

கார்த்திக்(வீரசங்கிலி)

பரமக்குடி

பி கு : 2024 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவில் உங்களை மீண்டும் ஒருமுறை நேரில் காண நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறேன்

முந்தைய கட்டுரைஅந்தகரணவிருத்தி, கடிதம்
அடுத்த கட்டுரைஉலகத்தின் மையத்தில்