கனவும் நடைமுறையும்
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
உங்கள் நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. என் வேலை மற்றும் பொருளியல் சார்ந்த ஒரு சிறு அறிமுகத்தை கூற ஆசைப்படுகிறேன். கல்லூரியில் இருந்து வெளியே வந்தவுடன் நான் Renualt and Nissan நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அங்கிருந்த நாட்களில் ஓய்வு நேரங்களில் keyboard வாசித்து பழகுவேன். என்னுடைய ஆர்வம் முழுக்க research oriented ஆக இருந்தமையால் மற்ற நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க ஆரமித்தேன். அங்கிருந்து e-con systems என்ற நிறுவனத்திற்கு வந்தேன், அங்கு இருக்கும் போதும் எப்போதுமே என் career ஐ பார்ப்பதோடு இசையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தேன்.
Embedded software engineer ஆக நான் அங்கு பணியாற்றிய நாட்களில் கூட, நான் அந்த வேலையின் மேல் ஒரு forced interest ஐ உருவாக்கி கொண்டு தான் வேலை செய்தேன். எந்த ஒரு துறையிலும் அதன் பின்புலம், வரலாறு மற்றும் scientifical approach மூலம் அதில் என்னால் ஒரு interest ஐ வளர்த்துக்கொள்ள முடியும். அந்த வேலையில் இருந்து வரும் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி என்னுடைய actual interest இல் நேரம் செலவிட்டு, அதனை வளர்த்துக்கோள்வது என்பதே என்னுடைய நோக்கம். ஆனால் அந்த forced interest ஐ வெகு நாட்கள் என்னால் வைத்திருக்க முடியவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அது உடைகிறது. அப்போது burnout ஆகிறேன்.
எனக்கு பொருட்களை வாங்குவது மீதும் விலை உயர்ந்த bike, car வாங்க வேண்டும் என்ற ஆர்வம் எதுவும் இல்லை. என் தந்தை ஒரு Retired SI, LNT இல் இப்போது வேலைப்பார்த்து வருகிறார். அம்மா homemaker. குழந்தை பிறந்து ஒரு வருடம் தான் ஆகிறது அதனால் என் மனைவியும் இப்போது வேலைக்கு போக முடியாத சூழல். நான் சேமித்திருக்கும் பணத்தில் யார் உதவியும் இன்றி, என்னால் என் வீட்டில் இருந்து, 7 மாத காலம் தாக்கு பிடிக்க முடியும். இசை துறையில் ஏதேனும் ஒரு வேலையை அடுத்த வருடம் மார்ச்க்குள் பெற்றுவிட வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். மீண்டும் engineering வேலையாக இருந்தாலும் sound design போன்ற பொறியியல் சார்ந்த இசை துறையில் இருக்கும் வேலையாவது தேடிக்கொள்ளவே விரும்புகிறேன். அதற்கான பயிற்சியை courseகள் மூலம் எடுத்துக் கொள்கிறேன். Keyboard வாசிக்கும் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறேன்.
இந்த அளவிற்கு நான் ஒரு பெரிய முடிவு எடுத்ததற்கான காரணம், இப்போது நான் இந்த முடிவை எடுக்க வில்லை என்றால், இன்னும் commitment (child’s school fee) வரும்போது இதே முடிவு மிகவும் கடினமாக இருக்கும் என்பதனால் தான். எனக்கான கால அவகாசம் குறைவு. இந்த முடிவை நான் திருமணத்திற்கு முன்பே எடுத்திருக்க வேண்டும் ஆனால் காலத்தை வீனடித்துவிட்டேன். என் நம்பிக்கை சில நேரங்களில் சிதறுகிறது, தினமும் unifiedwisdom.guru மற்றும் jeyamohan.in இணயதளங்களை படித்து வருகிறேன். எந்த ஒரு distraction இலும் இப்போது நான் கவனம் செலுத்த வில்லை. social media வை முற்றிலும் ஒதுக்கி விட்டேன். புத்தகங்கள் படிப்பது, இசை பயிற்சி எடுப்பது, இசை கேட்பது அல்லது podcast, audiobook கேட்பது. இப்படி தான் என் தினசரி வழக்கமாக இருக்கிறது.
எனக்கு எதிலும் ஒரு நம்பிக்கையின்மை இருந்து வந்தது. கடவுளை நம்புவதா ? வேண்டாமா ? எந்த பாதையை தேர்ந்தெடுப்பது போன்ற கேள்விகள் மனதில் எழும். தத்துவார்ந்த புரிதலிலும் குழப்பங்கள் இருக்கும். உங்கள் ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்‘ படிக்கும் போதும், முழுமையறிவு இணயதளத்தை படிக்கும்போதும் மெல்ல மெல்ல சில புரிதல்கள் ஏற்படுகிறது. அத்வைதம் (ஞான மார்கத்தின்) மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. என்னுடைய இந்த career முடிவுகளுக்கு என் பெற்றோர்கள் மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த career decision இல் நான் வெற்றியடைய உங்கள் ஆசியையும் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
அ